ARTICLE AD BOX
'மாநகரம், 'கைதி', 'மாஸ்டர்', 'விக்ரம்', 'லியோ' படங்களின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ரஜினிகாந்த்துடன் இணைந்து எடுத்த 'கூலி' படம் சமீபத்தில் வெளியாகியிருந்தது.
இத்திரைப்படத்தை அடுத்து லோகேஷ் கடந்த ஞாயிற்றுக் கிழமை பார்வையாளருடன் அமர்ந்து கூலி படத்தைப் பார்த்திருந்தார்.
ரஜினிகாந்த், உபேந்திரா, நாகர்ஜுனா, அனிருத் இசை எனப் பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த கூலி படத்திற்குப் பெரும் எதிர்பார்ப்புக் கிளம்பியிருந்தது.
ரஜினி - லோகேஷ் கனகராஜ் - கூலிஇந்நிலையில் கோவையில் SSVM கல்வி நிறுவனத்தில் சினிமா ஆர்வமுள்ள மாணவர்கள் மத்தியில் பேசியிருக்கும் லோகேஷ் கனகராஜ், "இதுவரை நான் எதுவுமே சொன்னது இல்லை. ஆனால் ரசிகர்களின் அபரிமிதமான எதிர்பார்ப்பு உள்ளது அல்லவா, அதுதான் என்னை இவ்வளவு உயரத்திற்குக் கொண்டு வந்துள்ளது. என்னை மட்டுமல்ல அனைத்து நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவரையும்தான்.
அது தப்பு இல்லை. இந்த அபரிமிதமான எதிர்பார்ப்பு இல்லை என்றால் எங்களால் சினிமா பண்ணவே முடியாது. ரசிகர்களின் இந்த அபரிமிதமான எதிர்பார்ப்பைக் குறை சொல்ல முடியாது. உதாரணத்திற்கு கூலி படத்தையே எடுத்துக் கொள்வோமே, நாங்கள் படத்தில் டைம் டிராவல் என்று கூறவில்லை. எல்.சி.யூ-வில் படம் இருக்கிறது, இல்லை என்று எதுவும் கூறவில்லை. அப்படி இருந்தும் இவை அனைத்தையும் ரசிகர்களாகவே பேசி ரசிகர்களாகவே சொல்லிக் கொண்ட விஷயங்கள். நான் ஒரு டிரைலர் கூட வெளியிடவில்லை.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் | Director Logesh Kanagarajஇங்கு ரசிகர்களுக்கு ரஜினி சார் படம் என்றால் ஒரு எதிர்பார்ப்பு உள்ளது. அதேபோல் லோகேஷ் கனகராஜ் படம் என்றால் அதற்கு ஒரு ஹைப் உள்ளது. அதை எப்படித் தடுக்க முடியும். அதற்கு வழியே இல்லை. ஆனால் என்னால் ஒருபோதும் அவர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு கதை எழுத முடியாது. அதற்கு நான் ஒருபோதும் முயற்சி செய்ய மாட்டேன். நான் எழுதும் கதை அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்தால் மகிழ்ச்சி" என்று பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

3 months ago
5





English (US) ·