ARTICLE AD BOX
'கூலி' படத்தின் வெளியீடு நெருங்கி வருவதால், படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் பரபரப்பாக இருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வாரம் சென்னையில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து, ஹைதராபாத்திலும் படக்குழுவினர் ஒரு புரோமோஷன் நிகழ்வை நடத்தியிருந்தனர்.
Coolie Teamமும்பையில் வருகிற 11-ம் தேதி ஒரு நிகழ்வை நடத்துவதற்கும் திட்டமிட்டிருக்கிறார்கள்.
லோகேஷ் கனகராஜ் எப்போது தன் உதவி இயக்குநர்களுக்கு முன்னுரிமை கொடுத்துப் பட நிகழ்வுகளில் அவர்களை மேடையிலேற்றி பாராட்டுவார்.
தற்போது தனது உதவி இயக்குநர்களுக்கு நன்றி தெரிவித்து, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார்.
அந்தப் பதிவில் அவர், "‘கூலி’ இன்னும் சில நாட்களில் வெளியாகவிருக்கும் நிலையில், இந்தப் படத்திற்காக தங்கள் இதயத்தை முழுமையாக அர்ப்பணித்து உழைத்த முழு குழுவினருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
With #Coolie unleashing in just a few days, I want to take a moment to thank the entire team who poured their hearts into it - 140 days of shoot spread over 2 years!
This project has been incredibly close to my heart.
Proud of you boys pic.twitter.com/hpxfHTj65J
2 ஆண்டுகளில் 140 நாட்கள் நடைபெற்ற படப்பிடிப்பிற்காக உழைத்திருக்கிறீர்கள்! இந்தத் திரைப்படம் என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது. மை பாய்ஸ், உங்களை நினைத்துப் பெருமைப்படுகிறேன்!" எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார்.
Coolie - Shruti Haasan Exclusive: “அப்பாவைப் பற்றி ரஜினி சொன்ன விஷயங்கள் எனக்கான பொக்கிஷம்!”சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

4 months ago
6





English (US) ·