Coolie: "வேற சாங்... வேற வைப்..." - வெளியாகிறது சிட்டுக்கு பாடல்

6 months ago 7
ARTICLE AD BOX

ரஜினி காந்த் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி திரைப்படத்தின் சிட்டுக்கு பாடல் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினியின் 50 ஆண்டு கால சினிமா பயணத்தைக் கொண்டாடும் 'கூலி' திரைப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகிறது.

ஏற்கெனவே இந்தத் திரைப்படத்தின் க்ளிம்ஸ், ஸ்டில்ஸ், கூலி பவர் ஹவுஸ் பாடல் வெளியாகி ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பைத் தூண்டியிருக்கிறது.

கூலி

இந்தப் படத்தின் அடுத்த சிங்கிளாக வெளியாகவிருக்கிறது சிட்டுக்கு பாடல். இந்த பாடலின் 55 விநாடி காட்சிகள் சிட்டுக்கு வைப் என்ற பெயரில் வெளியாகி ரீல்ஸ்களில் வலம் வந்தது.

முழுப்பாடலும் வருகின்ற 25ம் தேதி வெளியாகும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த பாடலுக்கு நடன இயக்குநர் சாண்டி நடனம் அமைத்துள்ளார்.

Coolie

மல்டி ஸ்டார்களின் கூட்டணியில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தில், ரஜினியுடன், சத்யராஜ், நாகார்ஜூனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா ஜான், ஷோபின் ஷாகீர் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்களுடன் அமீர்கான் தோன்றுவதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. பூஜா ஹெக்டே ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார்.

Read Entire Article