ARTICLE AD BOX
ஐபிஎல் 2025 ஆம் ஆண்டிற்கான 18-வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் மோசமாக விளையாடி வருகிறது. இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் ஆறு போட்டிகளில் சிஎஸ்கே அணி தோல்வியைத் தழுவி இருக்கிறது.
வெறும் இரண்டு வெற்றியை மட்டுமே பெற்றுப் புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்தில் இருக்கிறது. சிஎஸ்கே அணியின் இந்தத் தொடர் தோல்விகளை ரசிகர்களும் முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் விமர்சித்து வருகின்றனர்.
சிஎஸ்கே வீரர்கள்வெறும் இரண்டு வெற்றியை மட்டுமே பெற்றுப் புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்தில் இருக்கிறது. சிஎஸ்கே அணியின் இந்தத் தொடர் தோல்விகளை ரசிகர்களும் முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் விமர்சித்து வருகின்றனர்.
அதிருப்தியைக் கொடுத்திருக்கலாம்
இந்நிலையில் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சிஎஸ்கே அணியின் CEO காசி விஸ்வநாதன் சிஎஸ்கே அணியின் தொடர் தோல்விகள் குறித்துப் பேசியிருக்கிறார். இதுதொடர்பாகப் பேசிய அவர், " சென்னையின் செயல்பாடுகள் உங்களுக்கு அதிருப்தியைக் கொடுத்திருக்கலாம்.
தோனி, காசி விஸ்வநாதன்வரும் நாட்களில் எங்கள் அணி சிறப்பாக ஆடும். 2010 ஆம் ஆண்டிலும் இப்படித்தான் ஆடியிருந்தோம். ஆனால், கடைசியில் எல்லாப் போட்டிகளையும் வென்று சாம்பியனானோம். அடுத்தடுத்தப் போட்டிகளில் எங்கள் அணி சிறப்பாக ஆட கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்" என்று கூறியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

8 months ago
8







English (US) ·