CSK vs DC : 'எங்களால் எவ்வளவு முயன்றும் முடியவில்லை...' - கேப்டன் ருத்துராஜ் வேதனை

8 months ago 8
ARTICLE AD BOX

'சென்னை அணி தோல்வி!'

சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த டெல்லிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றிருக்கிறது. சேப்பாக்கத்தில் சென்னை அணியை டெல்லி அணி 15 ஆண்டுகள் கழித்து வீழ்த்தியிருக்கிறது. இந்த சீசனில் சென்னை அணியின் ஹாட்ரிக் தோல்வி இது. இந்தத் தோல்வியைப் பற்றி சென்னை அணியின் கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் வேதனையாகப் பேசியிருக்கிறார்.

ருத்துராஜ்ருத்துராஜ்
CSK vs DC: 'டெஸ்ட் மேட்ச் ஆடுற இடம் இது இல்ல தோனி & கோ'- சென்னையின் தோல்விக்கான காரணங்கள் என்னென்ன?

'ருத்துராஜ் வேதனை!'

ருத்துராஜ் கெய்க்வாட் பேசியதாவது, ``கடந்த சில போட்டிகளாக எங்களுக்கு சாதகமாக எதுவும் நடக்கவில்லை. நாங்கள் எல்லாவிதத்திலும் முன்னேற்றம் அடைய வேண்டும் என நினைக்கிறோம். எங்களின் சிறப்பான பங்களிப்பைக் கொடுக்க நினைக்கிறோம். ஆனாலும் எதுவும் நடக்கவில்லை.

பவர்ப்ளேயில் நாங்கள் அதிகான விக்கெட்டுகளை விட்டுவிட்டோம். பௌலிங்கிலுமே பவர்ப்ளே பிரச்னையாகத்தான் இருக்கிறது. பௌலிங்கில் 15-20 ரன்களை விட்டு விடுகிறோம். பேட்டிங்கில் பவர்ப்ளேயில் அதிகமான விக்கெட்டுகளை விட்டு விடுகிறோம். அதுதான் பிரச்னை. அணியின் எல்லா வீரர்களும் ஒன்றிணைந்து முயன்றால் மட்டுமே எங்களுக்கு சாதகமான விஷயங்களை நிகழ்த்த முடியும்.

ருத்துராஜ்ருத்துராஜ்

பவர்ப்ளேயில் சுமாராக ஆடிவிட்டு அதன்பிறகு விட்ட ரன்ரேட்டை துரத்தும் முயற்சியில் மட்டுமே இருக்கிறோம். ஆதிக்கமாக ஆட முடியவில்லை. சிவம் துபே பேட்டிங் ஆடும்போதாவது ஒரு மொமன்ட்டம் கிடைக்கும் என நினைத்தோம். ஆனால் அப்போதும் ஒன்றும் நடக்கவில்லை. டெல்லி கேப்பிடல்ஸ் அணி சிறப்பாக பந்து வீசியது. சூழலை உணர்ந்து நன்றாக ஆடினர்.' என்றார்.

CSK vs DC: 'டெஸ்ட் மேட்ச் ஆடுற இடம் இது இல்ல தோனி & கோ'- சென்னையின் தோல்விக்கான காரணங்கள் என்னென்ன?
Read Entire Article