CSK vs DC: கேப்டனாகும் தோனி? மைக் ஹஸ்ஸி சூசகம்; Chepauk Breaking

8 months ago 8
ARTICLE AD BOX

சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி நாளை நடக்கவிருக்கிறது.

இதற்காக இரு அணிகளும் சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

DhoniDhoni

இந்நிலையில், நாளைய போட்டியில் காயம் காரணமாக ருத்துராஜ் கெய்க்வாட் ஆடுவது சந்தேகமாகியிருக்கிறது.

அதனால், நாளைய போட்டியில் தோனி கேப்டனாக இருக்கக்கூடும் என அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி கூறியிருக்கிறார்.

'மீண்டும் கேப்டனாகும் தோனி?'

மைக் ஹஸ்ஸி பேசுகையில், "ருத்துராஜ் குணமாகிவிடுவார் என நம்புகிறோம். இன்றும் பேட்டிங் ஆடுகிறார். ஆனால், இன்னும் எதுவும் உறுதியாகவில்லை.

HusseyHussey

ருத்துராஜ் கேப்டனாக இல்லையெனில், யார் கேப்டனாக இருப்பார் என்பதைப் பற்றி ருத்துராஜூம் ப்ளெம்மிங்கும்தான் முடிவு செய்வார்கள். எங்கள் அணியில் ஒரு இளம் விக்கெட் கீப்பர் இருக்கிறார். அவர் கேப்டனாக இருக்கலாம்" என்றார்.

தோனி கடைசியாக 2023 சீசனின் இறுதிப்போட்டியில் கேப்டனாக செயல்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Read Entire Article