ARTICLE AD BOX
ஐ.பி.எல்-இல் இந்தாண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் செயல்பாடுகள் பல்வேறு கேள்விகளுக்கும், விமர்சனங்களுக்கும் உள்ளாகியிருக்கின்றன.
மும்பைக்கு எதிரான முதல் போட்டியில் மட்டும் வெற்றிபெற்ற சி.எஸ்.கே அணி, அடுத்த இரண்டு போட்டிகளில் ஆர்.சி.பி., ஆர்.ஆர் அணிகளிடம் போராடுவதற்கான இன்டன்ட் கூட காட்டாமல் தோல்வியடைந்தது.
இந்த மூன்று போட்டிகளிலும் நூர் அகமது, கலீல் அகமது, ரச்சின் ரவீந்திரா, ருத்துராஜ் கெய்க்வாட்டைத் தவிர யாரும் பெரிதாகச் சோபிக்கவில்லை.
ராகுல் திரிபாதிஎப்போதும் போல, எதற்காக கடைசி 10 பந்துகளில் ஆடுவதற்கு தோனியை பிளெயிங் லெவனில் எடுக்க வேண்டும் என்ற கேள்வி நீடித்துக்கொண்டே இருக்கிறது.
மிடில் ஆர்டரில் ஷிவம் துபே அடித்தால்தான் ரன், அவர் சீக்கிரமே அவுட்டாகிவிட்டால் அப்படியே அணி படுத்துவிடுகிறது.
எல்லாவற்றுக்கும் மேல், பவர்பிளேயில் மற்ற அணிகளின் டாப் ஆர்டர் 80 - 100 ரன்கள் அடிக்க முயலும்போது, சென்னை அணியின் டாப் ஆர்டர் 60 ரன்கள் சேர்க்கவே திணறுகிறது.
CSK vs RR: Ruturaj Gaikwad’s Mistakes Exposed - Commentator Muthu Interview | IPL | Dhoniஇதில், டெவான் கான்வேக்குப் பதில் ரச்சின் ஒப்பிங்கில் இறங்குவது ஓகேதான். ஆனால், ஓப்பனிங்கில் தன்னை நிரூபித்த ருத்துராஜ் கெய்க்கவாட்டை ஒன் டவுனுக்குத் தள்ளி, ஃபார்மில் இல்லாத ராகுல் திரிபாதியை ரச்சினுடன் எதற்காக ஓப்பனிங்கில் இறக்க வேண்டும் என்பது மிகப்பெரிய கேள்வியாக எழுந்திருக்கிறது.
இந்த நிலையில், சனிக்கிழமை நடைபெறவிருக்கும் டெல்லிக்கெதிரான போட்டியில் சிஎஸ்கே பிளெயிங் லெவனில் ராகுல் திரிபாதி இடம்பெறக்கூடாது என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறியிருக்கிறார்.
ஹர்பஜன் சிங்தனது யூடியூப் சேனலில் சிஎஸ்கே அணி குறித்து பேசிய ஹர்பஜன் சிங், ``சென்னை அணி அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்திருக்கிறது. அதில் நிறைய தவறுகளைச் செய்திருக்கிறார்கள்.
அதில் முதல் தவறு ராகுல் திரிபாதியை ஓப்பனிங்கில் இறக்குவது. ராகுல் திரிபாதி நல்ல வீரர்தான், ஆனால் அடுத்த போட்டியில் பிளெயிங் லெவனில் அவரை எடுக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறேன்.
பேட்டிங் செய்யும்போது உடலையே அதிகமாக அசைத்துக் கொண்டே இருந்தால் எப்போதுதான் பந்தைப் பார்ப்பீர்கள்? அவரிடமிருந்து ரன்கள் எதுவும் வருவதில்லை, அதற்கான இன்டன்ட்டும் இருப்பதாகத் தெரியவில்லை" என்று கூறினார்.
CSK : 'ரசிகர்களின் கொடுங்கனவு' - 2020 சீசனை ஞாபகப்படுத்தும் ருத்துராஜ்; எங்கெல்லாம் சொதப்புகிறார்?Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

8 months ago
8







English (US) ·