CSK vs KKR: ருத்துராஜூக்கு பதில் யார்? CSK குறிவைக்கும் ரீப்ளேஸ்மென்ட் வீரர்கள் யார் யார்?

8 months ago 8
ARTICLE AD BOX

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான ருத்துராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக நடப்பு தொடரிலிருந்து வெளியேறியிருக்கிறார். அவருக்குப் பதில் தோனி கேப்டனாகியிருக்கிறார். அதில் எந்த பிரச்னையுமில்லை. ஆனால், ஒரு பேட்டராக ருத்துராஜை சென்னை அணி ரொம்பவே தவறவிடும். ருத்துராஜூக்கு பதில் சிஎஸ்கே எந்த வீரரை அணிக்குள் கொண்டு வரும்? ருத்துராஜூக்கு பதில் யாரை பயன்படுத்தப்போகிறீர்கள் எனும் கேள்விக்கு, 'எங்கள் அணியில் உள்ள வீரர்களையே முதலில் முயன்று பார்ப்போம்.

அதன்பிறகு தேவைப்பட்டால் வருங்காலத்தை மனதில் வைத்து ரீப்ளேஸ்மெண்ட் வீரரைத் தேர்வு செய்வோம்" என பயிற்சியாளர் ப்ளெம்மிங் பேசியிருந்தார்.

Ruturaj GaikwadRuturaj Gaikwad

அவரின் கூற்றுப்படி பார்த்தால் முதலில் அணிக்குள் இருக்கும் வீரர்களைத்தான் ருத்துராஜூக்கு பதில் பயன்படுத்தப்போகிறார்கள். கொல்கத்தாவுக்கு எதிரான போட்டி இன்னும் சில மணி நேரங்களில் தொடங்கவிருக்கிறது. இன்னும் எந்த வீரரையும் ரீப்ளேஸ்மென்ட் வீரராக சென்னை அணி புக் செய்திருப்பதாகத் தகவல் வெளியாகவில்லை.

ஆக, அணிக்குள் இருக்கும் ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா ஆகியோரில் ஒருவரைத்தான் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் ருத்துராஜூக்கு பதிலாக பயன்படுத்துவார்கள். ராகுல் திரிபாதிக்கு இதில் அதிக வாய்ப்பிருக்கிறது. இன்னும் ஒன்றிரண்டு போட்டிகளுக்கு அவரை முயன்று பார்க்கலாம். அவர் செட் ஆகவில்லை என்றால்தான் ரீப்ளேஸ்மென்ட் வீரருக்குச் செல்வார்கள்.

ஆயுஷ் மாத்ரே என்ற இளம் வீரரை சென்னை அணி சமீபத்தில் ட்ரையல்ஸூக்கு அழைத்ததாக ஒரு செய்தி வந்தது. அவருக்கு 17 வயதுதான். திறமையான டாப் ஆர்டர் வீரர். ஆனால், அப்படி ஒரு இளம் வீரரை ரீப்ளேஸ்மெண்ட்டாக அழைத்து வந்து நேரடியாக வாய்ப்பு கொடுப்பது சென்னையின் ஸ்டைல் கிடையாது. அப்படி இளம் வீரருக்கு வாய்ப்பு கொடுக்க நினைத்தால், ஏற்கனவே அணிக்குள் ஷேக் ரஷீத், வன்ஷ் பேடி போன்ற வீரர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கே வாய்ப்பு கொடுத்துவிடலாம்.

ஆயுஷ் மாத்ரே ஆயுஷ் மாத்ரே

ஆக, ரீப்ளேஸ்மென்ட் என யோசித்தால் ஒரு அனுபவ வீரருக்கு செல்லவே வாய்ப்பிருக்கிறது. ஏலத்தில் விற்காமல் போன ப்ரித்திவி ஷா, மயங்க் அகர்வால் போன்றோர் ருத்துராஜின் இடத்தை நிரப்ப சரியான ஆப்சனாக இருப்பார்கள். வெளிநாட்டு வீரர்கள் என்றால் டெவால்ட் ப்ரெவிஸ், சாய் ஹோப், கைல் மேயர்ஸ் போன்றோர் நல்ல ஆப்சனாக இருப்பார்கள்.

சென்னை அணி என்ன முடிவெடுக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
Read Entire Article