CSK vs MI: `வத்திக்குச்சி பத்திக்கிச்சு' - சூரையாடிய கலீல் அகமத்; சோதனையில் ரோஹித் சர்மா

9 months ago 8
ARTICLE AD BOX

சென்னை vs மும்பை :

ஐபிஎல் 18-வது சீசனின் 3வது போட்டி தலா ஐந்து முறை சாம்பியன்களான சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாகம் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தார் சென்னை அணியின் கேப்டன் ருத்துராஜ் .

CSK vs MICSK vs MI

முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியின் தொடக்க வீரர்களாக மும்பை அணியின் முன்னாள் கேப்டனான ரோஹித் சர்மா மற்றும் தென்னாபிரிக்கா வீரர் ரிங்கிள்டன் களமிறங்கினர். எல் கிளாசிகோ என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் துவக்கம் முதலே சென்னை அணி பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர்.

சென்னை அணியின் மாஸ்டர் பிளான்:

முதல் ஓவரை கலீல் அகமத் வீச ரோஹித் எதிர் கொண்டார் . சிறப்பாக பந்து வீசிய கலீல் அகமத் முதல் மூன்று பந்துகளை டாட் செய்தார். மூன்று பந்துகளும் தடுமாறிய ரோஹித் சர்மா நான்காவது பந்தை அடிக்கும் முயற்சியில் மிட் விக்கெட் திசையில் நின்று கொண்டிருந்த சிவம் தூபே கையில் கேட்ச் கொடுத்து ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகினார். தொடர்ச்சியாக இடது கை வேகப் பந்து வீச்சாளர்களிடம் தனது விக்கட்டை பறிகொடுத்து வரும் ரோஹித் சர்மா, கலீல் அகமதிடம் மூன்றாவது முறை ஆட்டம் இழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Khaleel AhmedKhaleel Ahmed

கடந்தாண்டு ஐபிஎல் சீசனில் கலீல் அகமத் பவர் பிளேவில் மட்டும் எட்டு விக்கட்டுகள் வீழ்த்தி நல்ல ஃபார்மில் இருந்து வருகிறார். அதனுடன் ரோஹித் சர்மாவின் பலவீனத்தை அறிந்து சென்னை அணியும் அவரிடம் முதல் ஓவரை கொடுத்து, வீசிய நான்காவது பதிலையே ரோஹித் சர்மாவை விக்கெட்டை தட்டி தூக்கியது சென்னை அணி. 2025 ஐபிஎல் 18 வது சீசனில் சென்னை அணியின் முதல் ஆட்டமான இந்த போட்டியில் ரோஹித் சர்மாவை பூஜ்ஜியத்தில் விக்கெட் எடுத்ததன் மூலம் பாசிட்டிவாகத் தொடங்கியிருக்கிறது.

ரோஹித் சர்மாவுக்கு வந்த சோதனை:

மும்பை அணியின் முன்னாள் கேப்டனான ரோஹித் சர்மா ஐபிஎல் போட்டிகளில் மட்டும் 6,628 ரன்கள் குவித்துள்ளார். மும்பை அணிக்கு கேப்டனாக இருந்து ஐந்து முறை கோப்பையை வென்று தந்துள்ளார். இவ்வளவு சாதனைகளை படைத்திருந்தாலும் ,18 முறை டக் அவுடானா மோசமான சாதனைக்கும் ரோஹித் சர்மா ஆளாகியுள்ளார். அதிக டக் அவுட் பட்டியலில் ரோஹித் சர்மா, ஆஸ்திரேலியா வீரர் மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக் ஆகியோர் தலா 18 டக் அவுட்டுகளாகியுள்ளனர்.

SRH vs RR: `எந்த பாலையும் சாமிக்கு விடல'-கெத்து காட்டிய ஹைதராபாத்; போராடிய ராஜஸ்தான் பேட்டர்கள்
Rohit SharmaRohit Sharma

இவர்களுக்கு அடுத்தபடியாக பியூஸ் சாவ்லா மற்றும் சுனில் நரேன் தலா 16 முறை டக் அவுட் ஆகியுள்ளனர். குறிப்பாக ரோஹித் சர்மா இடதுகை வேகபந்துவீச்சாளர்களடம் மட்டும் 29 முறை அவுட் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article