ARTICLE AD BOX
'பெங்களூரு வெற்றி!'
சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கிடையேயான போட்டியில் பெங்களுரு அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது.
17 ஆண்டுகள் கழித்து சேப்பாக்கத்தில் சென்னை அணியை பெங்களூரு வீழ்த்தியிருக்கிறது. இந்தப் போட்டியில் வென்ற பிறகு பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் பட்டிதர் சில முக்கியமான விஷயங்களைப் பேசியிருந்தார்.
Rajat Patidar'ரஜத் சொல்லும் வெற்றி ரகசியம்!'
அவர் பேசியதாவது, "சேப்பாக்கம் பிட்ச்சில் நாங்கள் எடுத்தது ஒரு நல்ல ஸ்கோர். ஏனெனில், பந்து கொஞ்சம் நின்று வந்தது. பேட்டர்களுக்கு ஆடுவதற்குச் சிரமமாக இருந்தது.
அதனால் நாங்கள் 200 ரன்களை எடுக்க வேண்டுமென நினைத்தோம். நான் களத்தில் நீண்ட நேரம் நிற்க விரும்பினேன்.
நான் நின்றால் அதிரடியாக அதிக ரன்களை எடுக்க முடியும் என்கிற நம்பிக்கை இருந்தது. மேலும், இங்கே அதிகமாக ஸ்பின்னர்களை பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தேன்.
லிவிங்ஸ்டன் 4 ஓவர்களை வீசி அசத்திவிட்டார். பவர்ப்ளேயில் ஹேசல்வுட்டும் புவனேஷ்வரும் வீசிய ஸ்பெல்தான் போட்டியை எங்கள் பக்கமாகத் திருப்பியது. பவர்ப்ளேயில் அவர்கள் வீழ்த்திய 3 விக்கெட்டுகள்தான் Game Changing மொமண்டாக அமைந்தது.
சேப்பாக்கம் மைதானத்தில் சென்னையை எதிர்கொள்வது எப்போதுமே சுவாரஸ்யமாகத்தான் இருக்கும். ஏனெனில், அவர்களின் ரசிகர்கள் அந்த அணிக்குக் கொடுக்கும் ஆதரவு அவ்வளவு பெரிதாக இருக்கும்" என்றார்.
CSK vs RCB: `சேப்பாக்கத்தில் ஹோம் க்ரவுண்ட் சாதகம் இல்லவே இல்லை’ - தோல்விக்குப் பின் ஃப்ளெமிங்Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

9 months ago
9







English (US) ·