ARTICLE AD BOX
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 2025 IPL சீசன் சிறப்பானதாக அமையவில்லை என்றாலும், இளைஞர்கள் - அனுபவமிக்க விரர்களின் பிணைப்பையும் அதன் இன்றியமையாமையையும் வெளிப்படையாகக் காட்டும் சீசனாக அமைந்தது.
வீரர்களின் ஃபார்ம், காயம், கேப்டன்சி மாற்றம் எனச் சில சிக்கல்களைச் சந்தித்தது சி.எஸ்.கே.
இதனால் உர்வில் படேல், ஆயுஷ் மாத்ரெ, ஷேக் ரஷீத், ப்ரெவிஸ் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது.
இந்த சீசனில் அறிமுகமான உர்வில் பட்டேல் 3 போட்டிகளில் விளையாடினார். சிறப்பான பேட்டிங் திறமையை வெளிப்படுத்தினார். அதனால், அணியில் நிலைத்திருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Jadeja : 'தோனி என் மேல வச்ச அந்த நம்பிக்கைக்காகதான்..!' - ஜடேஜா எமோஷனல்உர்வில் ஒரு விக்கெட் கீப்பரும் கூட என்பதனால், கீப்பராக தோனியின் இடத்தை இவர் நிரப்புவாரா என்ற கேள்வியும் ரசிகர்களுக்கு உள்ளது.
இந்த நிலையில் தோனியுடன் CSK அணியில் விளையாடிய அனுபவம் குறித்து தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துகொண்டுள்ளார் உர்வில் படேல்.
"லெஜண்டரி வீரரான எம்.எஸ்.தோனியின் தலைமையின் கீழ் விளையாடும் நம்ப முடியாத வாய்ப்புக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.
மைதானத்துக்கு உள்ளேயும் வெளியேயும் 'தல'யுடன் பகிர்ந்த ஒவ்வொரு தருணமும் அமைதி, தலைமைத்துவம் மற்றும் பணிவைக் கற்றுக்கொடுக்கும் ஒரு மாஸ்டர்கிளாஸ்.
நான் ஏற்கனவே நிறையக் கற்றுக்கொண்டேன். அவருடைய வழிகாட்டுதலின் கீழ் தொடர்ந்து வளர ஆவலாக இருக்கிறேன்.
Dhoni: "ஒரு விஷயம் நடப்பதற்கு முன்பாகவே..." - தோனி குறித்த சுவாரஸ்யம் பகிர்ந்த டெவால்ட் ப்ரெவிஸ்ஒரே ட்ரெஸ்ஸிங் அறையில் அவருக்கு அருகில் நின்றது முதல், அவருடன் மைதானத்தைப் பகிர்ந்துகொண்டது வரை ஒவ்வொரு நொடியும் கனவு நனவானதைப் போலிருந்தது.
Dhoni - urvil on Fieldஎன்னுடைய குடும்பமும் அதை அனுபவிக்க அங்கே இருந்தது இன்னும் சிறப்பானது. எங்களுக்கு அது மறக்க முடியாத தருணம்.
Urvil Patel Family with Dhoniதோனி பாய் தானே, “Best Wishes Urvil" எனக் கையெழுத்திட்ட ஜெர்சியைக் கொடுத்தார். அது எப்போதுக்குமாக ஃப்ரேமில் வைக்கப்படுகிறது.
Dhoni Signed Jersyஉண்மையாகவே ஒரு சிறந்த தலைவருடன், இன்னும் சொல்லப்போனால் சிறந்த மனிதருடன் உத்வேகமளிக்கக் கூடிய பயணமாக இருந்தது" எனப் பகிர்ந்துள்ளார் உர்வில்.
"RCB வென்றால் பொது விடுமுறை அளிக்க வேண்டும்" - கர்நாடக முதல்வருக்குக் கடிதம் எழுதிய ரசிகர்!சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

6 months ago
8







English (US) ·