ARTICLE AD BOX
19-வது ஐ.பி.எல் சீசனை முன்னிட்டு மினி ஏலம் நேற்று (டிச.16) அபுதாபியில் நடைபெற்றது.
எப்போதும் அனுபவம் வாய்ந்த வீரர்களை எடுக்கும் சிஎஸ்கே இந்த முறை இளம் வீரர்களை ஏலத்தில் அதிகமாக எடுத்திருக்கிறது.
இந்நிலையில் சிஎஸ்கே வீரர்கள் தேர்வு குறித்து பேசிய சென்னை அணியின் CEO காசி விஸ்வநாதன், " கேமரூன் கிரீனை எடுக்கலாம் என்றுதான் பார்த்தோம்.
பிரசாந்த் வீர்Talent Scout team
ஆனால், எங்களிடம் இருந்த தொகையில் 50% செலவு செய்துவிட்டால், இளம் வீரர்களை எடுக்க முடியாமல் போய்விடுமோ என்று பயம் வந்துவிட்டது.
ஏலத்தில் எடுக்க அதிக இளம் வீரர்களை அடையாளப்படுத்தி வைத்திருந்தோம்.
இளம் வீரர்களில் யாரெல்லாம் நன்றாக விளையாடுகிறார்கள் என்பதை எங்கள் Talent Scout team தெரிவித்துக்கொண்டே இருந்தார்கள்.
அவர்கள் தெரிவித்த முதல் வீரர் பிரசாந்த் வீர் தான். ஜடேஜாவை ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு டிரேடிங் செய்துவிட்டோம்.
அதனால் அணியில் நம்பர் 7 க்கு ஒரு வீரர் தேவைப்பட்டார். அந்த வீரர் பேட்டிங், பெளலிங் இரண்டிலும் திறமை கொண்டவராக இருக்க வேண்டும் என்று நினைத்தோம்.
காசி விஸ்வநாதன்- தோனி அந்தவகையில் தான் பிரசாந்த் வீரை அணிக்கு தேர்வு செய்தோம். நாங்கள் நல்ல அணியை உருவாக்கியிருக்கிறோம் என்று நினைக்கிறேன்.
வழக்கம் போல தல தோனியும், ருதுவும் அணிக்காக சிறந்த விஷயங்களை செய்வார்கள்.
ரசிகர்களே, இந்த ஆண்டு சிதம்பரம் ஸ்டேடியத்தில் சிஎஸ்கேவை பார்த்து சந்தோஷப்படுவீர்கள். நாங்கள் கோப்பையை வெல்வோம் என்று நம்புகிறேன்” என்று பேசியிருக்கிறார்.
IPL: "என்னுடைய அந்த கனவு நிஜமாகவில்லை; தோனி பாய்.!" - சிஎஸ்கே குறித்து பதிரனா உருக்கம்
1 week ago
2







English (US) ·