ARTICLE AD BOX
'வாழ்வா சாவா நிலை!'
சென்னை அணி லக்னோவை இன்று லக்னோவின் ஏக்னா மைதானத்தில் எதிர்கொள்கிறது. தொடர்ச்சியாக 5 தோல்விகளை அடைந்திருக்கும் நிலையில், இனிமேல் சென்னை அணிக்கு எல்லாமே வாழ்வா சாவா ஆட்டங்கள்தான். அப்படியிருக்க இந்தப் போட்டியை வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் சென்னை அணி இருக்கிறது.
CSKஇந்தப் போட்டியில் சென்னை அணியின் ப்ளேயிங் லெவனில் மாற்றம் இருக்குமா? குறிப்பாக, மிக மோசமாக ஆடிக்கொண்டிருக்கும் ராகுல் திரிபாதியும் அஷ்வினும் ப்ளேயிங் லெவனில் இருப்பார்களா எனும் கேள்வி எழுந்திருக்கிறது.
'அஷ்வினின் மோசமான ஆட்டம்!'
அஷ்வினை 9.75 கோடி ரூபாய்க்கு சென்னை அணி ஏலத்தில் வாங்கியது. பல நாஸ்டலஜியாக்களை பொதிந்து வைத்திருக்கும் உள்ளூர் வீரர் என்பதால் ரசிகர்களும் அஷ்வினை வெகுவாக வரவேற்றிருந்தனர். அஷ்வின் மீது பெரும் எதிர்பார்ப்புகளையும் வைத்திருந்தனர். ஆனால், நடந்து முடிந்திருக்கும் 6 போட்டிகளில் அஷ்வின் தாக்கம் ஏற்படுத்தும் வகையில் எதுவுமே செய்யவில்லை.
Ashwinஆடியிருக்கும் 6 போட்டிகளில் பெரும்பாலான போட்டிகளில் பேட்டர்களிடம் கடுமையாக அடி வாங்கியிருக்கிறார். 6 போட்டிகளில் 5 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்திருக்கிறார். எக்கானமி 9.90. சென்னை அணியின் ஸ்பின்னர்களில் இவரின் எக்கானமிதான் அதிகம். அதேமாதிரி, சேப்பாக்கத்தில் மட்டுமாவது நன்றாக வீசுவார் என்பதுதான் எல்லாருடைய குறைந்தபட்ச எதிர்பார்ப்பாகவும் இருந்தது. அங்கேயும் அடிதான் வாங்கியிருக்கிறார்.
'அஷ்வினை ட்ராப் செய்யலாம்!'
நன்றாக வீசிக்கொண்டிருக்கும் நூர் அஹமதைவிட அஷ்வினுக்குதான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். எவ்வளவு அடிபட்டாலும் நம்பி பவர்ப்ளேயிலேயே மீண்டும் மீண்டும் ஓவர் கொடுக்கிறார்கள். ஆனாலும் எந்தப் பலனும் இல்லையே. எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
Ashwinஅதனால் அஷ்வினை பென்ச்சில் வைத்துவிட்டு ஸ்ரேயாஸ் கோபாலைப் பயன்படுத்தி பார்க்கலாம் அல்லது பேட்டிங் பலவீனத்தைக் கருத்தில்கொண்டு கூடுதலாக ஒரு பேட்டரையாவது இறக்கிவிடலாம். ஆனால், லக்னோவுக்கு எதிரான இந்தப் போட்டியில் அஷ்வின் ட்ராப் செய்யப்படுவாரா என்பதும் சந்தேகமே. ஏனெனில், லக்னோ அணியில் பண்ட், பூரன், மில்லர் என மூன்று அபாயமான இடதுகை பேட்டர்கள் இருக்கிறார்கள்.
CSK : 'ரெய்னா, பத்ரிநாத் போன்ற வீரர்களை சிஎஸ்கே தவறவிடுகிறது!' - ஹர்ஷா போக்லே கருத்துமேட்ச் அப் படி பார்த்தால் ஒரு ஆப் ஸ்பின்னராக அஷ்வின் ஒரு நல்ல ஆப்சன். ஆனால், அஷ்வின் ஆப் ஸ்பின்னே வீசுவதில்லையே. கேரம் பால்களைத்தான் அதிகம் வீசுகிறார். அதனால் அஷ்வினுக்கு இனியும் லெவனில் இடம் கொடுக்க வேண்டுமா என்பதை யோசிக்கவேண்டும்.
'வாய்ப்பைப் பயன்படுத்தாத திரிபாதி!'
அதேமாதிரிதான் ராகுல் திரிபாதியும். 4 போட்டிகளில் ஆடி 46 ரன்களை மட்டுமே எடுத்திருக்கிறார். ஓப்பனிங்கும் செட் ஆகவில்லை. நம்பர் 3 யும் செட் ஆகவில்லை. அணி வென்றுகொண்டிருக்கும் சமயத்தில் இந்த மாதிரியான வீரர்கள் செட் ஆவதற்கு நேரம் கொடுக்கலாம்.
Rahul Tripathiஆனால், தொடர் தோல்வியில் இருக்கும்போது, பென்ச்சில் வேறு நல்ல ஆப்சன்கள் இருக்கையில் இன்னும் வாய்ப்புகளைக் கொடுத்துக் கொண்டிருப்பதில் நியாயமில்லை. 'ஷேக் ரஷீத்தை லெவனில் சேர்க்க பரீசிலித்து வருகிறோம்!' என அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ப்ளெம்மிங் பேசியிருக்கிறார். ஆக, ராகுல் திரிபாதிக்கு பதில் இளம் வீரர் ஷேக் ரஷீத்தை அணிக்குள் கொண்டு வரலாம்.
CSK : 'கே.எல் ராகுலுக்கு பதில்தான் திரிபாதி'- ஏலத்தில் சிஎஸ்கே தவறவிட்ட வீரர்கள் யார் யார் தெரியுமா?அவர் ஒன்றிரண்டு போட்டிகளில் சொதப்பினாலும் கூட அடுத்தடுத்து வாய்ப்புகளை வழங்கி மெருகேற்றலாம்.
சென்னை அணியின் ப்ளேயிங் லெவனில் என்னென்ன மாற்றங்கள் வேண்டும் என்பதைப் பற்றி கமெண்ட்டில் தெரியப்படுத்துங்கள்.

8 months ago
8







English (US) ·