ARTICLE AD BOX
'தோனி கேப்டன்'
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையேயான போட்டி நாளை சேப்பாக்கத்தில் நடக்கவிருக்கிறது. இந்தப் போட்டிக்கு முன்பாக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் சென்னை அணியின் பயிற்சியாளர் ப்ளெம்மிங் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதாவது, சென்னை அணியை இனி தோனிதான் வழிநடத்துவார் என கூறியிருக்கிறார்.
தோனிப்ளெம்மிங் கூறியதாவது, 'ருத்துராஜூக்கு முழங்கையில் அடிபட்டிருக்கிறது. அதிலிருந்து அவர் இன்னும் மீளவில்லை. அந்த காயத்துக்கான சிகிச்சைக்காக அவர் அணியிலிருந்து விடைபெற்றிருக்கிறார்.
நடப்பு சீசனிலிருந்தும் விலகியிருக்கிறார். அதனால் எங்கள் அணியிலுள்ள Uncapped வீரர் தோனி இனி சென்னை அணியை இந்த சீசனில் வழிநடத்துவார்.'என கூறியிருக்கிறார்.
Flemmingசேப்பாக்கத்தில் நடந்த கடந்த போட்டியின் போதே ருத்துராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக விலகுவார் தோனி கேப்டனாக பொறுப்பேற்பார் போன்ற செய்திகள் வெளியாகியிருந்தது. ஆனால், ருத்துராஜ் அந்த போட்டியிலும் ஆடினார். அதற்கடுத்து பஞ்சாபுக்கு எதிரான போட்டியிலும் ஆடினார். காயம் முழுமையாக குணமாகததால் இப்போது வெளியேறியிருக்கிறார்.

8 months ago
8







English (US) ·