CSK : ருத்துராஜ் பிடிவாதத்துக்கு CSK அணி தோற்கலாமா? - தவறுகள் நடப்பது எங்கே?

8 months ago 8
ARTICLE AD BOX

'சென்னையின் தொடர் தோல்வி!'

சென்னை அணி தொடர்ச்சியாக நான்காவது போட்டியில் தோற்றிருக்கிறது. புள்ளிப்பட்டியலில் அடிவாரத்தில் இருக்கிறது. 5 முறை கோப்பையை வென்ற ஒரு அணி இப்படி மோசமாகத் தோற்றுக்கொண்டிருப்பது ரசிகர்களுக்கு வேதனையைக் கொடுத்திருக்கிறது.

ருத்துராஜ்ருத்துராஜ்

'ருத்துராஜின் பிடிவாதம்!'

சென்னை அணியின் தோல்விக்கு என்னென்ன வெல்லாமோ காரணங்கள் சொல்லப்படுகிறது. ஆனால், மிக முக்கிய காரணம் ருத்துராஜின் பிடிவாதம்தான். தவறான முடிவுகளை எடுத்துவிட்டு விமர்சனங்களுக்கு காது கொடுக்காமல் கிணற்றுத் தவளையாக இருக்க நினைக்கும் அவரின் குணாதிசயம்தான் சென்னையின் சறுக்கலுக்கு முதற் காரணம்.

'ஓப்பனிங் இறங்கவே மாட்டேன்!'

பெங்களூருவுக்கு எதிரான போட்டியிலிருந்தே ஒவ்வொரு போட்டிக்கும் முன்பான பத்திரிகையாளர் சந்திப்பு, போட்டிக்கு முன்பான டாஸ், போட்டிக்குப் பிறகான பரிசளிப்பு விழா என எல்லா இடத்திலும் சென்னையை அணியை நோக்கி, 'ருத்துராஜ் ஏன் நம்பர் 3 இல் வருகிறார்? அவர் ஓப்பனிங்கில் வரலாமே?' எனும் கேள்வி முன்வைக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

ருத்துராஜ்ருத்துராஜ்

நேற்றைய போட்டியின் டாஸின்போதும் போட்டிக்குப் பிறகும் ருத்துராஜிடமே கூட கேட்கப்பட்டது. ஒரே பதில்தான். ``நான் நம்பர் 3 இல் இறங்கப் போகிறேன் என்பதை ஏலத்தின்போதே முடிவு செய்துவிட்டோம்." என்கிறார் உறுதியாக. ஒவ்வொரு தோல்விக்கும் பிறகும்கூட அவரின் பேச்சில் எந்த சலனமும் இல்லை. அப்படித்தான் இறங்குவேன் எனப் பிடிவாதமாகக் கூறுகிறார். ஆனால், அது சரியான ரிசல்ட்டை அணிக்குக் கொடுக்கவில்லை என்பதே நிதர்சனம்.

இந்த சீசன் தொடங்குவதற்கு முன்பாக ருத்துராஜ் நம்பர் 3 இல் இறங்குவார் என யாருக்குமே ஐடியா இல்லை. கடந்த சீசனில் கான்வே காயம் அடைந்திருந்தார். அதனால் ருத்துராஜூம் ரச்சினும் ஓப்பனிங் இறங்கியிருந்தார்கள். இந்த சீசனில் கான்வே முழு உடற்தகுதியோடு இருந்தார். அதனால் ருத்துராஜோடு ஓப்பனிங் இறங்கப்போவது யார் ரச்சினா? கான்வேயா? எனும் கேள்விதான் இருந்ததே ஒழிய ருத்துராஜ் ஓப்பனிங் இறங்குவாரா மாட்டாரா எனும் கேள்வியே இல்லை.

CSK : `கான்வேயை வெளியே அனுப்பியது ஏன்?' - தோல்விக்குக் காரணம் சொல்லும் ருத்துராஜ்

மும்பைக்கு எதிரான முதல் போட்டிக்கு முன்பாக ருத்துராஜ் கெய்க்வாட் பத்திரிகையாளர்களை சந்திக்க வந்திருந்தார். அப்போது, உங்களுடன் ஓப்பனிங் இறங்கப்போவது யார் எனும் கேள்வி கேட்கப்பட்டது. அது சர்ப்ரைஸ் என ருத்துராஜ் கூறினார். ஆனால், இவ்வளவு பெரிய சர்ப்ரைஸாகக் கொடுப்பார் என யாருமே எதிர்பார்க்கவில்லை.

ஒரு இடத்தில் பிரச்சனை இருந்தால் அதைத் தீர்க்கிறேன் என அந்த இடத்தில் மாற்றங்களைச் செய்யலாம். ருத்துராஜ் கெய்க்வாட் - கான்வே ஓப்பனிங் கூட்டணி நிரூபிக்கப்பட்ட கூட்டணி, வெற்றிக் கூட்டணி. அதில் எந்தப் பிரச்னையும் இல்லை. பிரச்னையே இல்லாத இடத்தில் மாற்றத்தை செய்து புதிதாக ஒரு பிரச்னையை கிளப்பிவிட்டிருக்கிறார் ருத்துராஜ். அவர் நம்பர் 3 இல் இறங்குவது அணிக்கு செட் ஆகவில்லை என்பது தெரிந்த பிறகும் தன்னுடைய முடிவு சரியானதுதான் எனப் பிடிவாதமாக நிற்கிறார்.

CSKCSK

'மோசமான பௌலிங் ரொட்டேஷன்!'

ஒரு கேப்டனாக பௌலிங் ரொட்டேஷனிலுமே கூட பிடிவாதமாக பல தவறுகளைச் செய்திருக்கிறார். அஷ்வினுக்கு எல்லா போட்டியிலும் பவர்ப்ளேயில் ஒரு ஓவரைக் கொடுத்திருக்கிறார். டெல்லிக்கு எதிரான போட்டியைத் தவிர எல்லா போட்டியிலுமே அஷ்வின் பவர்ப்ளேக்குள் வீசிய ஓவரில் அடிதான் பட்டிருக்கிறார்.

JadejaJadeja

ராஜஸ்தானுக்கு எதிராக பவர்ப்ளேக்குள் வீசிய ஓவரில் 19 ரன்களையும் பெங்களூருவுக்கு எதிராக 16 ரன்களையும் மும்பைக்கு எதிராக 14 ரன்களையும் அஷ்வின் கொடுத்திருக்கிறார். இப்படி அடி வாங்கிய பிறகும் அஷ்வினுக்கு தொடர்ச்சியாக எல்லா போட்டியிலும் பவர்ப்ளேயில் ஓவர் கொடுக்கும் பிடிவாதத்தை என்னவென்று சொல்வது? உச்சக்கட்டமாக பஞ்சாபுக்கு எதிரான போட்டியில் பவர்ப்ளேக்குள் அஷ்வின் வீசிய ஒரே ஓவரில் 21 ரன்களைக் கொடுத்திருந்தார்.

அணியின் சிறந்த பௌலர் நூர் அஹமதுதான். அவர்தான் ஸ்ட்ரைக்கிங் பௌலராக இருக்கிறார். அவர்தான் விக்கெட் எடுக்கிறார். ஆனால் அவருக்கு கடந்த இரண்டு போட்டிகளாக 4 ஓவரை முழுமையாக கொடுக்கவில்லை. இதெல்லாம் வினோதமான முடிவு. அதேமாதிரி, பஞ்சாபுக்கு எதிராக எல்லா பௌலர்களும் ரன்களை அள்ளிக் கொடுக்க ஜடேஜா மட்டும் 3 ஓவர்களை வீசி 18 ரன்களைத்தான் கொடுத்திருந்தார்.

PBKS vs CSK : சென்னையை வீழ்த்திய அந்த 24 பந்துகள்; ஸ்ரேயஸ் ஐயரின் மாஸ்டர் பிளான்

இருப்பதிலேயே அவர்தான் சிறப்பாக வீசியிருந்தார். ஆனால், அவருக்கு முழுமையாக 4 ஓவர்களை கொடுக்கவில்லை. முதிர்ச்சியற்ற பௌலிங் ரொட்டேஷன் இது. பதிரனாவையும் டெத் ஓவர்களில் மட்டுமே பயன்படுத்துகிறார்.

'இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடையாது!'

பேட்டிங் ஆர்டரில் மொமண்டம் கிடைக்கவில்லை மொமண்டம் கிடைக்கவில்லை என ஒவ்வொரு போட்டியிலும் புலம்புகிறார். விஜய் சங்கர் மாதிரியான பேட்டரை வைத்துக்கொண்டு எப்படி இப்படி பேசுகிறார் என தெரியவில்லை. அவர் ஒரு ஹார்ட் ஹிட்டர் கிடையாது. டாப் 3 இல் யாருமே ஹார்ட் ஹிட்டர் கிடையாது. நம்பர் 4/5 இல் வரும் விஜய் சங்கரும் ஹார்ட் ஹிட்டர் கிடையாது. எனில், அவர் எதற்கு அணியில்?

200+ சேஸிங்கில் அவரை இறக்குவதுகூட இல்லையே. அப்படியிருக்க அந்த இடத்தில் இண்டண்டோடு அட்டாக்கிங்காக ஆடக் கூடிய ஷேக் ரஷீத், வன்ஸ் பேடி போன்ற இளம் வீரர்களை இறக்கலாமே? நாங்கள் அனுபவ வீரர்களைத்தான் நம்புவோம் என ப்ளெம்மிங் சொல்கிறார். இதே ருத்துராஜ் என்ன அனுபவ வீரராக அணிக்குள் வந்தவாரா? ஸ்பார்க் இல்லை என தோனியால் தூற்றப்பட்டு ஓரமாக உட்கார வைக்கப்பட்டவர். சூழலினால் கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி உயர்ந்துவிட்டார்.

RuturajRuturaj

அவருக்குக் கிடைத்த வாய்ப்பை அவர் ஏன் மற்ற இளம் வீரர்களுக்குக் கொடுக்க தயங்குகிறார்?

செய்வதெல்லாம் தவறு எனத் தெரிந்தும் அதை ஒத்துக்கொள்ள மனமில்லாமல், மீண்டும் மீண்டும் அதே தவறுகளை ருத்துராஜ் செய்து கொண்டிருக்கிறார். இந்த பிடிவாதத்தை அவர் கைவிடாமல் சென்னை அணியால் வெல்லவே முடியாது.

இதைத் தவிர வேறு என்ன மாற்றங்களை CSK செய்ய வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதைக் கமென்ட்டில் தெரிவிக்கவும்

Read Entire Article