CSK : 'வன்ஷ் பேடி, ஷேக் ரஷீத்...!' - பென்ச்சில் இருக்கும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்குமா சிஎஸ்கே?

8 months ago 8
ARTICLE AD BOX

'தோல்விப் பாதையில் சிஎஸ்கே!'

ஹாட்ரிக் தோல்வியைச் சந்தித்திருக்கும் நிலையில் சென்னை அணி இன்று பஞ்சாப் அணியை எதிர்கொள்ளவிருக்கிறது. வெற்றி பெறுவதற்கான இண்டண்ட்டே இல்லாமல் சென்னை அணி தோற்று வருகிறது.

CSKCSK

அனுபவமான வீரர்களுக்குதான் முன்னுரிமை கொடுப்போம் எனக்கூறி பார்மிலேயே இல்லாத வீரர்களை இறக்கி சொதப்பி வருகின்றனர். ஆனால், அந்த அணியின் பென்ச்சில் சில திறமையான இளம் வீரர்கள் இருக்கவே செய்கிறார்கள். இன்றைய போட்டியிலாவது அவர்களில் யாருக்காவது வாய்ப்பு கிடைக்குமா?

வன்ஷ் பேடி:

சேப்பாக்கத்தில் தோனியும் விஜய் சங்கரும் நின்று நிதானமாக ஆடிக்கொண்டிருக்கும்போது பெவிலியனில் ஒருவர் தூங்கிக் கொண்டிருந்தாரே அவர்தான் வன்ஷ் பேடி. 22 வயதே ஆகும் இளம் வீரர். க்ரீஸூக்குள் வந்ததிலிருந்தே அடித்து வெளுக்கக்கூடிய ஹார்ட் ஹிட்டர். பெரிய அனுபவமெல்லாம் இல்லை. ஆனாலும், ஆடிய சில போட்டிகளிலேயே வியப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

Vansh BediVanish Bedi

கடைசியாக நடந்த டெல்லி ப்ரீமியர் லீகில் 9 இன்னிங்ஸ்களில் 221 ரன்களை 185 ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்திருக்கிறார். ஒரு போட்டியில் 19 பந்துகளில் 47 ரன்களை அடித்து நாட் அவுட்டாக இருந்திருக்கிறார். இன்னொரு போட்டியில் 41 பந்துகளில் 96 ரன்களை எடுத்திருக்கிறார். வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக 174 ஸ்ட்ரைக் ரேட்டையும் ஸ்பின்னர்களுக்கு எதிராக 193 ஸ்ட்ரைக் ரேட்டையும் வைத்திருக்கிறார். ஆக, சென்னையின் மிடில் ஆர்டருக்கு தேவைப்படக் கூடிய அதிரடி ஆட்டக்காரர் இவர்தான்.

CSK vs DC : 'தோனிக்கென்ன தோனி இன்னும் நல்லாதான ஆடுறாரு!' - சப்போர்ட் செய்யும் ஃப்ளெம்மிங்

தீபக் ஹூடா, விஜய் சங்கர் என ஏற்கனவே பார்த்து பழகிய வீரர்களையே மீண்டும் மீண்டும் நம்பி ஏமாறுவதற்கு இவருக்கு ஒரு வாய்ப்பை கொடுத்துப் பார்க்கலாம். மிக முக்கியமான விஷயம் அவருக்கு உருட்டி உருட்டி ஆடும் ஆட்டங்களை பார்ப்பதற்கு கூட பிடிக்காது. அதனால்தான் பெவிலியனிலேயே தூங்கிவிட்டார்.

ஷேக் ரஷீத் :

ஷேக் ரஷீத்துக்கு வயது 20 தான். 2023 சீசனில் இருந்தே சென்னை அணியில் இருக்கிறார். இந்த மெகா ஏலத்திலும் அவரை மீண்டும் வாங்கி வந்தார்கள். ஆனால், இன்னமும் அவரை ஒரு போட்டியில் கூட பயன்படுத்தவில்லை. அவ்வப்போது சப்ஸ்டிடியூட் வீரராக மட்டும் இறக்கி ஊறுகாயாக தொட்டுக் கொள்கிறார்கள்.

Shaik RasheedShaik Rasheed

டாப் ஆர்டரில் ஆடக்கூடிய திறமையான இளம் பேட்டர். 2022 இல் உலகக்கோப்பையை வென்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியின் முக்கியமான வீரராக இருந்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில் 94 ரன்களை எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு உதவியிருந்தார். லேட்டஸ்ட்டாக நடந்த ஆந்திர ப்ரீமியர் லீகில் 6 இன்னிங்ஸில் 297 ரன்களை எடுத்திருந்தார்.

Vijay ShankarVijay Shankar

அதிக ரன்கள் எடுத்த வீரர்களில் டாப் 5 க்குள் இருந்தார். சென்னை அணிக்கு டாப் ஆர்டரில் மொமண்டமே கிடைப்பதில்லை. அதுதான் சென்னை அணியின் தோல்விக்கு மிக முக்கிய காரணம். இன்னும் ஒன்றிரண்டு போட்டிகளை பார்த்துவிட்டு, அப்போதும் டாப் ஆர்டர் தேறவில்லையெனில் ஷேக் ரஷீத்தை உள்ளே கொண்டு வரலாம்.

அன்ஷூல் கம்போஜ்:

அன்ஷூல் கம்போஜ் மும்பையின் முகாமிலிருந்து வந்தவர். ஏலத்தில் 3.20 கோடி ரூபாய் கொடுத்து சென்னை அணி வாங்கி வந்தது. 24 வயதுதான் ஆகிறது. ஹரியானாவுக்காக ரஞ்சியில் கேரளாவுக்கு எதிராக ஒரே இன்னிங்ஸில் அத்தனை 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார். அதேமாதிரி, துலீப் டிராபியில் ஒரே போட்டியில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.

Anshul KambojAnshul Kamboj

விஜய் ஹசாரேவில் 10 போட்டிகளில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். Emerging Asia Cup தொடரில் இந்தியா A அணிக்காக நன்றாக ஆடியிருக்கிறார். நடப்பு சீசனில் மும்பை அணியில் இருந்திருந்தால் இதற்குள் 2-3 போட்டிகளில் ஆடியிருப்பார். சென்னையில் பென்ச்சிலேயே இருக்கிறார். கடந்த போட்டியில் முகேஷ் சௌத்ரி இறங்கிய இடத்திலேயே அன்ஷூல் கம்போஜ் இறங்கியிருக்க வேண்டும். பஞ்சாப், கொல்கத்தா என வருகிற போட்டிகளிலாவது அன்ஷூலை பயன்படுத்துகிறார்களா என்பதைப் பார்ப்போம்.

குர்ஜப்நீத் சிங்:

இவர் பஞ்சாப்க்காரர். சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அணியில் ஆடுவதற்காக தமிழ்நாட்டுக்கு குடிபெயர்ந்தார். தன்னுடைய முதல் இன்னிங்ஸிலேயே சௌராஷ்ட்ராவுக்கு எதிராக 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார். தமிழ்நாடு ப்ரீமியர் லீகிலும் திண்டுக்கல் அணிக்காக சிறப்பாக வீசியிருக்கிறார். புஜ்ஜி பாபு தொடரில் நன்றாக ஆடியிருக்கிறார். சென்னை அணிக்கு நெட் பௌலராகவும் இருந்திருக்கிறார். நெட்ஸில் சிறப்பாக வீசி கவனத்தை ஈர்த்ததால்தான் சென்னை அணி அவரை ஏலத்தில் எடுத்தது. நியூபாலில் பந்தை மூவ் செய்யக்கூடியவர் என்பதால் இடதுகை பௌலராக முகேஷ் சௌத்ரியை விட நல்ல ஆப்சனாக இருப்பார்.

'நாங்கள் இளம் வீரர்களை விட அனுபவ வீரர்களுக்குதான் முக்கியத்துவம் கொடுப்போம். அதுதான் எங்களுக்கு கடந்த காலங்களில் நல்ல ரிசல்ட்டை கொடுத்திருக்கிறது.' என சென்னை அணியின் பயிற்சியாளர் ப்ளெம்மிங் பேசியிருக்கிறார். இதே எண்ணத்தோடு இருந்துதான் சாய் கிஷோர் மாதிரியான வீரரையெல்லாம் 4 சீசன்களாக பென்ச்சில் மட்டுமே வைத்து வெளியே அனுப்பினார்கள்.

CSK vs DC: 'டெஸ்ட் மேட்ச் ஆடுற இடம் இது இல்ல தோனி & கோ'- சென்னையின் தோல்விக்கான காரணங்கள் என்னென்ன?

அவர் இப்போது குஜராத் அணியில் மேட்ச் வின்னிங் ஸ்பெல்களை வீசிக் கொண்டிருக்கிறார். உங்களுடைய ஸ்டைல், உங்களுடைய பார்முலா எல்லாம் ஓகேதான். ஆனால், அது காலத்துக்கேற்ப அப்டேட் ஆக வேண்டும் என்பதையும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள் ப்ளெம்மிங்.

Read Entire Article