ARTICLE AD BOX
பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. இந்தியாவும், நியூசிலாந்தும் 24 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சாம்பியன்ஸ் டிராபி பைனலில் இன்று மோதுகிறது. துபாயில் இந்தப் போட்டி நடைபெறுகிறது. பாதுகாப்பு காரணங்களால் பாகிஸ்தானுக்கு செல்ல இந்திய அணி மறுத்துவிட்டதால், இந்தியா ஆடும் போட்டிகள் அனைத்தையும் துபாயில் நடத்தப்படுகிறது.
இந்தியா - Champions trophyஇதனாலேயே, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மூன்று மைதாங்கள் இருந்தும் துபாய் மைதானத்தில் மட்டும் இந்திய அணியை ஆடவைப்பது நியாயமற்ற செயல், இது இந்தியாவுக்கு சாதமான செயல் என முன்னாள், இந்நாள் வீரர்கள் ஐ.சி.சி-யை விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்தியாவின் அனைத்து போட்டிகளையும் துபாய் மைதானத்தில் நடத்துவது இந்தியாவுக்கு சாதகமானது என்று தான் நினைக்கவில்லை என இந்திய வீரர் புஜாரா தெரிவித்திருக்கிறார்.
புஜாரா ஓப்பன் டாக்
பிரபல தனியார் ஊடகத்திடம் இதுகுறித்து பேசிய புஜாரா, ``சாம்பியன்ஸ் டிராபி தொடங்குவதற்கு முன்பே போட்டி அட்டவணை வெளியானது. மேலும், இந்தியா பாகிஸ்தானுக்கு செல்லாததற்குக் காரணம் பாதுகாப்பு வசதிதான். அதனால், ஐ.சி.சி-யும், பி.சி.சிஐ-யும் இணைந்து நடுநிலையான மைதானத்தை தேடின. அதன்படி, இந்தியாவும் பாகிஸ்தானும் நடுநிலையான மைதானத்தில் விளையாடின. அதோடு, ஐக்கிய அரபு எமிரேட்ஸும் பாகிஸ்தானுக்கு நெருக்கமாக இருக்கிறது. எனவே, இதனை நியாயமற்றது என்றும் இந்தியாவுக்கு சாதகமானது என்றும் நான் நினைக்கவில்லை.
புஜாராஒருவேளை, இந்தியா தோற்றிருந்தால் துபாயில் விளையாடுவது பற்றி யாரும் பேசியிருக்க மாட்டார்கள். இந்தியாவிடம் இருக்கும் ஆல்ரவுண்டர்களின் எண்ணிக்கைதான் இந்தியாவுக்கு சாதகம். எங்களிடம் ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப், வருண் உள்ளனர். இந்த நான்கு பேரும் தரமான சுழற்பந்து வீச்சாளர்கள். இதுவே மற்ற அணிகளைப் பார்த்தால், இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலும் பாகிஸ்தானிலும் தடுமாறுகிறார்கள். ஹர்திக் பாண்டியா உட்பட எங்களிடம் சிறந்த ஆல்-ரவுண்டர்கள் உள்ளனர். மேலும், பேட்டிங் யூனிட் நன்றாக இருக்கிறது . இந்திய அணியின் இந்த சமநிலையே வெற்றிக்கு காரணம்." என்று கூறினார்.
Ind v Nz : 'நியூசிலாந்தை வீழ்த்த இந்தியா செய்ய வேண்டிய 5 விஷயங்கள்!' - என்னென்ன தெரியுமா?Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel


9 months ago
8







English (US) ·