CT Unfair Advantage: "சிரிப்புதான் வருகிறது; ஆனால் இந்தியர்களும் அப்படிச் சொல்வதா?" - அஸ்வின் கோபம்

9 months ago 9
ARTICLE AD BOX

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இன்று இந்தியா நியூசிலாந்து அணிகள் துபாய் சர்வதேச மைதானத்தில் மோதுகின்றன. இந்தத் தொடரில் இந்திய அணி இதுவரை ஆடிய அனைத்துப் போட்டிகளும் துபாய் மைதானத்தில்தான் நடத்தப்பட்டது. இந்திய அணியுடன் மோதும் அணிகள் பாகிஸ்தானிலிருந்து துபாய்க்கு வந்து விளையாடின. இந்த அனைத்துப் போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றது.

india - champions trophy finalindia - champions trophy final

இதனால், இந்திய அணி மட்டும் எங்கும் பயணம் மேற்கொள்ளாமல் ஒரே இடத்தில் இருப்பது அவர்களுக்குச் சாதகமாக இருக்கிறது எனக் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இந்த நிலையில், இதுபோன்ற விமர்சனங்களைப் பார்க்கும்போது தனக்கு சிரிப்பு வருவதாக ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்துப் பேசிய ரவிச்சந்திரன் அஸ்வின், ``இந்திய அணி துபாயில் தொடர்ந்து விளையாடுவது குறித்து இந்திய அணி பயிற்சியாளர்கள் மற்றும் கேப்டனிடம் கேட்கப்படும் கேள்வியைப் பார்த்தால் எனக்கு சிரிப்பு தான் வருகிறது. ஒரு தொடரில் வீரர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதைப் பொறுத்துதான் அந்த அணிக்கு சாம்பியன் பட்டம் கிடைக்கும். வெறுமனே காரணங்கள் சொல்வதால் சாம்பியன் பட்டம் கிடைக்காது.

ரவிச்சந்திரன் அஸ்வின்

2009-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தென்னாப்பிரிக்க அணி அனைத்துப் போட்டிகளையும் ஒரே மைதானத்தில் தான் விளையாடியது. ஆனால், அந்த அணி முதல் சுற்றிலே வெளியேறியது. தென்னாப்பிரிக்கா இறுதிப் போட்டிக்குச் செல்லாததற்கு அந்த அணியின் செயல்பாடுகள்தான் காரணம். எந்த அணியாக இருந்தாலும், நல்ல கிரிக்கெட் விளையாடினால் மட்டுமே வெற்றிபெற முடியும்.

IND vs NZ: ``25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதைச் செய்யப் போகிறோம்" - வில் யங் நம்பிக்கை

இந்தியா தற்போது இறுதிப்போட்டியில் இருக்கிறது என்றால் அந்த அணி சிறப்பாக செயல்பட்டு இந்த நிலைக்கு வந்துள்ளது. இறுதிப்போட்டியில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால், இறுதிப் போட்டிக்கு வரத் தகுதியுடைய அணியாக இந்தியா இருந்திருக்கிறது. ஏனென்றால் அவர்கள் அந்த மாதிரி செயல் திறனை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி தோற்றுவிட்டுச் சென்றால் நமது ஆடுகளத்தைத்தான் புகார் சொல்வார்கள்.

ரோஹித் - கவுதம் கம்பீர்

ஆனால், நாங்கள் வெளிநாட்டில் சென்று தோற்கும்போது இதுபோல் எந்த ஒரு குறையும் சொன்னது கிடையாது. இந்தக் கோப்பையை இந்தியா வென்றால் தொடர்ந்து இரண்டு ஐ.சி.சி தொடரை இந்தியா வென்றிருக்கிறது என்று அனைவரும் கொண்டாடுங்கள். அதை விட்டுவிட்டு மற்றவர்கள் குறை சொல்வதை ஏற்றுக்கொள்ளாதீர்கள். இந்திய அணி ஒரே மைதானத்தில் விளையாடுகிறது என்று வெளிநாட்டு வீரர்கள் மட்டுமல்லாமல் சில இந்தியர்களும் பேசுவதைப் பார்த்து எனக்குக் கோபம்தான் வருகிறது” என்று அஸ்வின் பேசியுள்ளார்.

Rohit Sharma : ஓய்வு பெறுகிறாரா ரோஹித் சர்மா? - பிசிசிஐயின் திட்டம் என்ன?
Read Entire Article