ARTICLE AD BOX
வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் ஐசரி K. கணேஷ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் 'D54' படத்தின் பூஜை நேற்று (ஜூலை 10) நடைபெற்றது. ‘போர் தொழில்’ படத்தை இயக்கி கவனம் ஈர்த்த விக்னேஷ் ராஜா இப்படத்தை இயக்குகிறார்.
பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தில் மமிதா பைஜு, K.S. ரவிக்குமார், ஜெயராம், கருணாஸ், சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
'Blue Star' படத்தில் பிரித்வி பாண்டியராஜன்'Blue Star' படத்தில் நடித்து கவனம் ஈர்த்த நடிகரும், இயக்குநருமான பாண்டியராஜனின் மகன் பிரித்வி பாண்டியராஜன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் பிரித்வி பாண்டியராஜன், "புது நாள், புது வாய்ப்பு. தனுஷ் சார் நடிக்கும் 'D54' படத்தில் நடிப்பதற்கு மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்.
இந்த சந்தோஷமான விஷயத்தைச் சொல்ல வார்த்தைகளே இல்லை. வாய்ப்பளித்த இயக்குநர் விக்னேஷ் ராஜாவிற்கு நன்றி. வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனத்திற்கும் நன்றி" என்று மகிழ்ச்சியுடன் பதிவிட்டிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

5 months ago
7





English (US) ·