DC vs GT : "டீசென்ட்டாக பந்து வீசினோம்; ஆனால்..." - தோல்விக்குப் பிறகு அக்சர் பேசியதென்ன?

8 months ago 8
ARTICLE AD BOX

குஜராத் டைடன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 200க்கும் மேலான ரன்கள் சேர்த்தும் தோல்வியைத் தழுவியுள்ளது டெல்லி கேப்பிடல்ஸ் அணி.

இந்த சீசனின் தொடக்கத்தில் தொடர்ந்து வெற்றிகளைக் குவித்துவந்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி, சமீபத்தில் தடுமாறத் தொடங்கியிருக்கிறது.

Shubman Gill - Axar patelShubman Gill - Axar patel

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான தோல்வி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக சூப்பர் ஓவர் வரை சென்ற போட்டி என டெல்லியின் கடுமையான பயணம் இந்த போட்டியிலும் தொடர்ந்தது.

தோல்வி குறித்துப் பேசிய அக்சர் படேல், "நாங்கள் 10-15 ரன்கள் குறைவாக இருந்தோம். ரன் குவிக்கும் வேகத்தை அதிகப்படுத்த முயன்றபோது விக்கெட்டுகள் விழத் தொடங்கிவிட்டன. முதல் இன்னிங்ஸை நாங்கள் நினைத்தபடி முடிக்க முடியவில்லை.

Delhi CapitalsDelhi Capitals

நாங்கள் டீசென்ட்டாக பந்துவீசினோம். இன்னும் சில வாய்ப்புகளை உருவாக்க முடிந்திருந்தால், போட்டி இன்னும் நெருக்கமாக சென்றிருக்கும். சில அதிரடியான ஷாட்கள்தான் முக்கிய பங்காற்றியிருக்கின்றன. நாங்கள் இந்த தோல்வியைப் பற்றி அதிகம் சிந்திக்க மாட்டோம்" எனப் பேசியுள்ளார்.

IPL களத்தில் புதிய ரோபோ நாய்; ஓடும், குதிக்கும், பேசும்... பெயர் வைத்து மகிழும் ரசிகர்கள்!
Read Entire Article