ARTICLE AD BOX
மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கும் நேற்று (ஏப்ரல் 13) நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், மும்பை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்து டெல்லிக்கு சவாலான இலக்கை நிர்ணயித்தது.
கரண் சர்மாஅடுத்து களமிறங்கிய டெல்லி அணி, முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தபோதிலும், கருண் நாயர் - அபிஷேக் போரல் கூட்டணியால் அடுத்த 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 100+ ரன்கள் சேர்த்து. இருப்பினும், மும்பை அணியில் ரோஹித்துக்குப் பதில் கரண் சர்மா இம்பேக்ட் பிளேயராகக் களமிறங்கி தனது முதல் ஓவரிலேயே விக்கெட் எடுக்க, அடுத்தடுத்த ஓவர்களில் டெல்லி வீரர்கள் தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இறுதியில், 12 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை வெற்றி பெற்றது. மும்பையின் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமான கரண் சர்மா (3 விக்கெட்டுகள்) ஆட்ட நாயகன் விருது வென்றார்.
கரண் சர்மாவெற்றிக்குப் பிறகு பேசிய ஆட்ட நாயகன் கரண் சர்மா, "ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. கடின உழைப்புக்குப் பலன் கிடைத்திருக்கிறது. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் என்னுடைய பெஸ்ட்டை கொடுக்க விரும்புகிறேன்.
Karun Nair: `Dear cricket, give me one more chance' - 1077 நாள்களுக்குப் பிறகு IPLல் கருணின் கம்பேக்இது மிகப்பெரிய தொடர். ஒரு மேட்ச்சில் 12 பேர் மட்டும்தான் விளையாட முடியும். என்னுடைய வேலையில் மட்டும் நான் கவனம் செலுத்தினேன். அதன் பிறகு என்ன நடந்தாலும் அது என் கையில் இல்லை. கே.எல். ராகுலை விக்கெட் எடுத்ததுதான் என்னுடைய ஃபேவரைட்.
That's how you make an
Karn Sharma with two crucial wickets to turn this game into a thriller #DC need 23 from 12 deliveries.
Updates ▶ https://t.co/sp4ar866UD#TATAIPL | #DCvMI | @DelhiCapitals pic.twitter.com/vTnnV5Pdfu
போட்டியின் முக்கியமான கட்டத்தில் பிடித்த அந்த கேட்ச் மிக முக்கியமானது. எனக்கு வாய்ப்பு கிடைக்கும்போது நான் சிறப்பாகச் செயல்படவும், அணிகள் வெற்றி பெறவும் நான் நிறைய பிரார்த்தனை செய்கிறேன். முதல் இன்னிங்ஸில் பனி அவ்வளவாக இல்லை. பின்னர், பந்தை மாற்றியதால் எங்களுக்கு நல்ல க்ரிப் கிடைத்தது. அது எங்களுக்கு நன்றாக இருந்தது" என்று கூறினார்.
DC vs MI: Anti Climax... சோக் செய்தே டெல்லியை காலி செய்த பல்தான்ஸ்; ஆட்டத்தையே மாற்றிய அந்த ஒரு மூவ்
8 months ago
8







English (US) ·