ARTICLE AD BOX
மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கும் நேற்று (ஏப்ரல் 13) நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், மும்பை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்து டெல்லிக்கு சவாலான இலக்கை நிர்ணயித்தது. அடுத்து களமிறங்கிய டெல்லி அணி, முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தபோதிலும், கருண் நாயர் - அபிஷேக் போரல் கூட்டணியால் அடுத்த 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 100+ ரன்கள் சேர்த்தது.
ஹர்திக் பாண்டியாஇருப்பினும், மும்பை அணியில் ரோஹித்துக்குப் பதில் கரண் சர்மா இம்பேக்ட் பிளேயராகக் களமிறங்கி தனது முதல் ஓவரிலேயே விக்கெட் எடுக்க, அடுத்தடுத்த ஓவர்களில் டெல்லி வீரர்கள் தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இறுதியில், 12 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை வெற்றி பெற்றது. மும்பையின் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமான கரண் சர்மா (3 விக்கெட்டுகள்) ஆட்ட நாயகன் விருது வென்றார்.
Karun Nair: `Dear cricket, give me one more chance' - 1077 நாள்களுக்குப் பிறகு IPLல் கருணின் கம்பேக்வெற்றிக்குப் பிறகு பேசிய மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா, "வெற்றி எப்போதுமே ஸ்பெஷலானது. குறிப்பாக இதுபோன்ற வெற்றிகள். கருண் நாயர் மிக அற்புதமாக பேட்டிங் செய்தார். ஆட்டம் எங்கள் கைகளை விட்டுப்போவது போல் இருந்தது. பவுண்டரி லைன் 60 மீட்டர் மட்டுமே இருக்கும்போது பந்தை தைரியமாக தூக்கிப்போடுவது கரண் சர்மாவின் சிறப்பான குணத்தை வெளிப்படுத்தியது.
ஹர்திக் பாண்டியாநாங்கள் ஒருபோதும் விட்டுக்கொடுக்கவில்லை. தொடர்ந்து நாங்கள் போட்டியில் இருக்க விரும்புகிறோம். கிடைத்த வாய்ப்புகளை எங்களால் தக்கவைத்துக் கொள்ள முடிந்தது. பேட்டிங் ஆர்டரில், அதிக பந்துகளை எதிர்கொள்ளும் வகையில் வீரர்களை உருவாக்க வேண்டும். பனி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஓரிரு விக்கெட்டுகள் ஆட்டத்தை மாற்றும் என்று எங்களுக்குத் தெரியும். எனக்கும் இது போல் நடந்திருக்கிறது, இது போன்ற வெற்றிகள் வேகத்தை மாற்றி எல்லாவற்றையும் புரட்டிப் போடுகின்றன" என்று கூறினார்.
DC vs MI: Anti Climax... சோக் செய்தே டெல்லியை காலி செய்த பல்தான்ஸ்; ஆட்டத்தையே மாற்றிய அந்த ஒரு மூவ்
8 months ago
8







English (US) ·