DC vs MI: "ஒவ்வொரு முறையும் போட்டியை பின்வரிசை பேட்டர்களிடம் விட்டுவிட முடியாது" - அக்சர்

8 months ago 8
ARTICLE AD BOX

மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கும் நேற்று (ஏப்ரல் 13) நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், மும்பை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்து டெல்லிக்கு சவாலான இலக்கை நிர்ணயித்தது. அடுத்து களமிறங்கிய டெல்லி அணி, முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தபோதிலும், கருண் நாயர் - அபிஷேக் போரல் கூட்டணியால் அடுத்த 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 100+ ரன்கள் சேர்த்து.

கருண் நாயர்கருண் நாயர்

இருப்பினும், மும்பை அணியில் ரோஹித்துக்குப் பதில் கரண் சர்மா இம்பேக்ட் பிளேயராகக் களமிறங்கி தனது முதல் ஓவரிலேயே விக்கெட் எடுக்க, அடுத்தடுத்த ஓவர்களில் டெல்லி வீரர்கள் தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இறுதியில், 12 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை வெற்றி பெற்றது. மும்பையின் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமான கரண் சர்மா (3 விக்கெட்டுகள்) ஆட்ட நாயகன் விருது வென்றார்.

அக்சர் படேல் - ஹர்திக் பாண்டியாஅக்சர் படேல் - ஹர்திக் பாண்டியா

தோல்விக்குப் பிறகு பேசிய டெல்லி கேப்டன் அக்சர் படேல், "ஆட்டத்தை எங்கள் வசம் வைத்திருந்தோம். மிடில் ஆர்டரில் சில சுமாரான விக்கெட்டுகள் மற்றும் மோசமான ஷாட்கள் இருந்தன. ஆட்டத்தை ஒவ்வொரு முறையும் பின்வரிசை பேட்டர்களிடம் விட்டுவிட முடியாது. சரி ரொம்ப யோசிக்க வேண்டாம். பந்து ஆரம்பத்தில் நின்று வந்தது. பின்னர், பனி எங்களுக்கு உதவியது. எங்களின் மூன்று ஸ்பின்னர்களில் இரண்டு பேரால் பவர்பிளேயிலும், டெத் ஓவரிலும் பந்துவீச முடியும். குல்தீப் நம்பமுடியாத அளவுக்குச் சிறப்பாக பந்துவீசுகிறார். பேட்டிங் பார்வையில் இந்த ஆட்டத்தை மறக்க வேண்டும்." என்று கூறினார்.

Karun Nair: `Dear cricket, give me one more chance' - 1077 நாள்களுக்குப் பிறகு IPLல் கருணின் கம்பேக்
Read Entire Article