December Releases: 'LIK, அகண்டா 2, தர்மேந்திராவின் கடைசிப் படம்' - டிசம்பர் ரிலீஸ் படங்கள் என்னென்ன?

4 weeks ago 2
ARTICLE AD BOX

ஆண்டின் இறுதி மாதம் வந்துவிட்டது! இந்தாண்டுக்கான லைனப்பில் வைக்கப்பட்ட பல திரைப்படங்களும் டிசம்பர் மாத ரிலீஸுக்குத் தயாராகி வருகின்றன.

அத்துடன் சில கிறிஸ்துமஸ் வெளியீட்டுத் திரைப்படங்களும் டிசம்பர் மாதம் வெளிவர இருக்கின்றன.

தமிழில் கார்த்தியின் 'வா வாத்தியார்', பிரதீப் ரங்கநாதனின் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி', மலையாளத்தில் மோகன்லாலின் 'விருஷபா', மம்மூட்டியின் 'களம்காவல்' எனப் பெரும் எதிர்பார்ப்பிற்குரிய படங்கள் டிசம்பர் ரிலீஸ் ரேஸுக்கு ரெடியாக உள்ளன.

டிசம்பர் மாதத்தில் என்னென்ன முக்கியமான படைப்புகள் வெளியாகவிருக்கின்றன என்பதை இங்கு பார்ப்போமா...

‘வா வாத்தியார்’  படத்தில்...‘வா வாத்தியார்’ படத்தில்...

தமிழ்:

'குட்டி ஸ்டோரி' ஆந்தாலஜியின் 'ஆடல் பாடல்' குறும்படத்திற்குப் பிறகு இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள திரைப்படம் 'வா வாத்தியார்'. கார்த்தி, கீர்த்தி ஷெட்டி, ராஜ்கிரண் ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படம் டிசம்பர் 5-ம் தேதி வெளியாகும் என அறிவித்திருக்கிறார்கள்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் அப்படத்தில் இரண்டு சிங்கிள் பாடல்கள் சமீபத்தில் வெளியாகியிருந்தன.

அதைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள 'LIK' திரைப்படமும் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் டிசம்பர் 18-ம் தேதி திரைக்கு வருகிறது.

ஆண் பாவம் பொல்லாதது விமர்சனம்: பாலின சமத்துவம் கோரும் கதையில் இத்தனை பாகுபாடுகள் ஏன் இயக்குநரே?!

முன்பே இத்திரைப்படம் வெளியாகும் எனப் படத்தின் வெளியீடு தேதியை அறிவித்திருந்தனர். இப்போது டிசம்பர் 18-ம் தேதி ரிலீஸுக்கு வேலைகள் நடந்து வருகின்றன. 'லவ் டுடே', 'டிராகன்', 'டியூட்' என ஹாட்ரிக் வெற்றிப் படங்களைக் கொடுத்த பிரதீப் ரங்கநாதனின் அடுத்த ரிலீஸ் இதுதான்.

அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி, சீமான், எஸ்.ஜே. சூர்யா எனப் பலரும் நடித்திருக்கின்றனர்.

அருண் விஜய், சித்தி இத்னானி ஆகியோர் நடித்திருக்கும் 'ரெட்ட தல' திரைப்படம் டிசம்பர் 18-ம் தேதி திரைக்கு வருகிறது.

LIK - BTS - Vignesh ShivnLIK - BTS - Vignesh Shivn

எழுத்தாளர் பெருமாள் முருகனின் சிறுகதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் 'அங்கம்மாள்' திரைப்படமும் டிசம்பர் 5-ம் தேதி திரைக்கு வருகிறது.

கீதா கைலாசம், 'வடசென்னை' சரண் ஆகியோர் இப்படத்தின் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

அனுபமா பரமேஷ்வரனின் 'லாக்டவுன்' திரைப்படமும் டிசம்பர் 5-ம் தேதி ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது.

டிசம்பர் மாதம் விமல் நடித்திருக்கும் இரண்டு படங்கள் திரைக்கு வருகின்றன. அவர் நடித்திருக்கும் 'மகசேனா' திரைப்படம் டிசம்பர் 12-ம் தேதி திரைக்கு வருகிறது.

மேலும், 'களவாணி', 'வாகை சூட வா','மஞ்சப்பை', 'களவாணி 2' ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் சற்குணம் இயக்கத்தில் விமல் நடித்திருக்கும் 'கலாட்டா பேமிலி' திரைப்படமும் டிசம்பர் 5-ம் தேதி வெளியாவதாக அறிவித்திருக்கிறார்கள்.

Tere Ishq Mein Review: `எங்கயோ பார்த்திருக்கேன்!' - பாலிவுட் ஹிட் வரிசையை தக்க வைக்கிறாரா தனுஷ்?!

மலையாளம்:

மம்மூட்டியின் 'களம்காவல்' திரைப்படம் நவம்பர் மாதம் இறுதியில் வெளியாகும் என அறிவித்திருந்தார்கள். ஆனால், இறுதி வேலைகள் தாமதமானதால் டிசம்பர் 5-ம் தேதி ரிலீஸாகும் என அறிவித்திருக்கிறார்கள்.

மோகன்லால் நடித்திருக்கும் 'விருஷபா', நிவின் பாலி நடித்திருக்கும் 'சர்வம் மாயா' ஆகிய திரைப்படங்களும் கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக வெளியாகிறது. நடிகர் திலீப் நடித்திருக்கும் 'பபபா' திரைப்படம் டிசம்பர் 18-ம் தேதி ரிலீஸாகிறது.

Kalamkaval - MammoottyKalamkaval - Mammootty

இந்தி:

ரன்வீர் சிங், சஞ்சய் தத், அக்ஷய் கண்ணா ஆகியோர் நடிப்பில் மல்டி ஸ்டாரர் ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியிருக்கும் 'துரந்தர்' திரைப்படம் டிசம்பர் 5-ம் தேதி திரைக்கு வருகிறது.

அதனைத் தொடர்ந்து மறைந்த பிரபல நடிகர் தர்மேந்திராவின் கடைசி திரைப்படமான 'இக்கீஸ்' திரைப்படம் கிறிஸ்துமஸ் வெளியீடாக வெளியாகிறது. இப்படத்தை பாலிவுட் இயக்குநர் ஶ்ரீராம் ராகவன் இயக்கியிருக்கிறார்.

தெலுங்கு & கன்னடம்:

டோலிவுட் இயக்குநர் போயப்பட்டி ஸ்ரீனு இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு 'அகண்டா' படத்தின் முதல் பாகம் வெளியாகியிருந்தது.

அப்படத்தின் இரண்டாம் பாகம் இப்போது பிரமாண்டமாக உருவாகி வெளியீட்டிற்கு வருகிறது. டிசம்பர் 5-ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

Revolver Rita Review: சொல்லியடிக்கும் டார்க் காமெடி தோட்டாவா? வானத்தை நோக்கி சுடப்பட்ட குண்டா?!
Akhanda 2Akhanda 2

கன்னடத்தில் நடிகர் கிச்சா சுதீப் நடித்திருக்கும் 'மார்க்' திரைப்படமும் கிறிஸ்துமஸ் வெளியீடாக வருகிறது.

இப்படத்தை 'கிச்சா கிரியேஷன்ஸ்' நிறுவனத்துடன் இணைந்து சத்யஜோதி நிறுவனம் தயாரித்திருக்கிறது.

கடந்த 1986-ம் ஆண்டு 'சத்யஜோதி' என்ற கன்னடத் திரைப்படத்தை கடைசியாக இந்த நிறுவனம் தயாரித்திருந்தது. அதைத் தொடர்ந்து கிச்சா சுதீப்பின் இந்தக் கன்னடப் படத்தைத் தயாரித்திருக்கிறது.

இப்படி கோலிவுட், டோலிவுட், மாலிவுட், பாலிவுட் என அனைத்து சினிமாவின் பிரமாண்ட படைப்புகளும் டிசம்பர் மாத ரிலீஸ் லைனப்பில் இருக்கின்றன. இதில் எந்தப் படத்திற்கு நீங்கள் பெரும் எதிர்பார்ப்போடு இருக்கிறீர்கள் என்பதை கமெண்ட்டில் சொல்லுங்கள்.
Read Entire Article