ARTICLE AD BOX
இசையமைப்பாளர் தேவாவின் மியூசிக் கான்சர்ட் நாளை கொழும்பில் நடக்கவிருக்கிறது.
இந்தக் கான்சர்ட் குறித்த செய்தியாளர் சந்திப்பில் அவர் பங்கேற்று கான்சர்ட் தொடர்பாகவும் இன்னும் சில விஷயங்களும் குறித்தும் பேசியிருக்கிறார்.
Deva Concertஅதில் 'மீசைய முறுக்கு 2' திரைப்படத்தில் தன்னை நடிக்கக் கேட்டதாகச் சொல்லியிருக்கிறார். அந்தக் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தேவா பேசுகையில், "'மீசைய முறுக்கு 2' திரைப்படத்தில் என்னை தாதாவாக நடிக்கக் கேட்டார்கள்.
அப்படத்தின் கதை ரொம்பவே அற்புதமான ஒன்று. நான் அப்படத்தில் நடிக்காமல் இருந்ததற்குக் காரணத்தையும் நான் அவர்களிடம் சொன்னேன்.
நான் இப்போது கான்சர்ட்களில் பிஸியாக இருக்கிறேன். சென்னை, பாரீஸ், ஜப்பான் என அடுத்தடுத்து பல இடங்களுக்கு நான் சென்று வருகிறேன்.
தேவா இந்தச் சமயத்தில் அவர்களுக்குச் சரியாக ஒத்துழைக்க முடியாது. நேரத்திற்கு என்னால் ஷூட்டிங்கிற்குப் போக முடியாது.
நடிக்காமலிருந்ததற்கு இன்னொரு முக்கியமான காரணமும் இருக்கிறது. ஆம், எனக்கு நடிக்கத் தெரியாது.
வசனங்களையெல்லாம் மனப்பாடம் செய்து பேச வேண்டும். நான் மறந்திடுவேன்" எனக் கூறியிருக்கிறார்.
Saregamapa: ``தேவா சார் கையெழுத்து என் தலையெழுத்தாக மாறும்னு நம்பி..!'' - `சரிகமப' அபினேஷ்சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

3 months ago
5





English (US) ·