Dhoni: 43 வயதில் ஐபிஎல்-லின் 11 வருட சாதனையை முறியடித்த தோனி; கூடுதலாக கோலி சாதனையும் சமன்!

8 months ago 8
ARTICLE AD BOX

சிஎஸ்கே அணி, நடப்பு ஐபிஎல் சீசனில் தனது முதல் போட்டியிலேயே சேப்பாக்கத்தில் மும்பையை வீழ்த்தி வெற்றியுடன் பயணத்தைக் தொடங்கியது. ஆனால், அதற்கடுத்து தொடர்ச்சியாக 5 போட்டிகளில் சி.எஸ்.கே தோல்வியடைந்தது.

இதில், மூன்று போட்டிகள் சேப்பாக்கத்தில் நடைபெற்றவை. இதற்கு முன்பு எந்த சீசனிலும் இதுபோன்று தொடர்ச்சியாக 5 போட்டிகளில் சி.எஸ்.கே தோற்றதே இல்லை, இதுவே முதல்முறை.

முதல் 6 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றிபெற்ற சி.எஸ்.கே, புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்துக்குச் சென்றது. இதனால், லக்னோவுக்கெதிரான அடுத்த போட்டியில் வெற்றிபெற்றால்தான் பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற நெருக்கடி சி.எஸ்.கே-வுக்கு ஏற்பட்டது.

csk - dhonicsk - dhoni

ஆட்ட நாயகன் தோனி

அந்த நெருக்கடியுடன் தோனி தலைமையில் லக்னோவுக்கெதிராக நேற்று (ஏப்ரல் 14) களமிறங்கிய சிஎஸ்கே, கடந்த போட்டிகளுடன் ஒப்பிடுகையில் பவுலிங், ஃபீல்டிங் இரண்டிலும் சிறப்பாகச் செயல்பட்டு 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் போட்டியை வென்றது.

இப்போட்டியில், ஒரு ஸ்டம்பிங், ஒரு ரன் அவுட், பேட்டிங்கில் முக்கியமான நேரத்தில் களமிறங்கி 11 பந்துகளில் 26 ரன்கள் அடித்தது என சி.எஸ்.கே-வின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றிய கேப்டன் தோனிக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

இது, ஐ.பி.எல்லில் தோனியின் 18-வது ஆட்ட நாயகன் விருது. இதன் மூலம், ஐ.பி.எல் வரலாற்றில் அதிக ஆட்ட நாயகன் விருது வென்றவர்கள் பட்டியலில், ஏபி டிவில்லியர்ஸ் (25), கிறிஸ் கெயில் (22), ரோஹித் சர்மா (19) ஆகியோரைத்த தொடர்ந்து விராட் கோலி, டேவிட் வார்னர் ஆகியோருடன் மூன்றாவது இடத்தை தோனி பகிர்ந்திருக்கிறார்.

தோனிதோனி

மேலும், அதிக ஆட்ட நாயகன் விருது வென்ற இந்தியர்கள் பட்டியலில் கோலியுடன் இரண்டாவது இடத்தை தோனி பகிர்ந்திருக்கிறார். ஆனால், இவற்றையெல்லாம் விட ஐ.பி.எல்லில் 11 வருட சாதனையை இந்த ஆட்ட நாயகன் விருது மூலம் தோனி முறியடித்திருக்கிறார்.

He's HIM. Always has been! 7️⃣#LSGvCSK #WhistlePodu pic.twitter.com/nthpwCruwV

— Chennai Super Kings (@ChennaiIPL) April 15, 2025

அதாவது, இதற்கு முன்பு ஐ.பி.எல்லில் அதிக வயதில் ஆட்ட நாயகன் விருது வென்றவர் ராஜஸ்தான் ராயல்ஸின் முன்னாள் வீரர் பிரவீன் தாம்பே. 2014-ல் கொல்கத்தாவுக்கெதிரான போட்டியில் தனது 42 வயதில் (சரியாக 42 வயது 208 நாள்கள்) பிரவீன் தாம்பே ஆட்ட நாயகன் விருது வென்றார். இவ்வாறிருக்க, நேற்றைய போட்டியில் தனது 43 வயதில் (சரியாக 43 வயது 280 நாள்கள்) தோனி ஆட்ட நாயகன் விருது வென்றிருக்கிறார். இதன் மூலம், ஐ.பி.எல் வரலாற்றில் அதிக வயதில் ஆட்ட நாயகன் விருது வென்ற வீரர் என்ற சாதனைக்குத் தற்போது தோனி சொந்தக்காரர் ஆகியிருக்கிறார்.

Dhoni Speech: 'எனக்கு ஏன் அவார்ட் கொடுத்தீங்க?' - ஆட்டநாயகன் தோனி ஜாலி பேட்டி
Read Entire Article