Dhoni: "5 ஐபிஎல் டிராபி கிரெடிட்டும் தோனிக்கு மட்டும்தான்" - இந்திய முன்னாள் வீரர் புகழாரம்

8 months ago 8
ARTICLE AD BOX

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஐ.பி.எல்லில் மிக மோசமாக ஆடிவருகிறது. இதுவரை 9 போட்டிகளில் ஆடி வெறும் 2 வெற்றிகளுடன் 7 போட்டிகளில் தோல்வியடைந்திருக்கும் சிஎஸ்கே அணி, கிட்டத்தட்ட பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்டது என்று கூட கூறலாம்.

தோனிதோனி

ஒட்டுமொத்த அணியுமே சொதப்பியபோதும் கூட, தோனியை முன்னாள் வீரர்கள் உட்பட பலரும் `எதற்கு இன்னும் விளையாடவேண்டும், அணிக்கு ஆலோசகராகலாம்' வசைபாடினர். வழக்கம்போல இதுபோன்ற விமர்சனங்களைத் தலைக்குள் ஏற்றாத தோனி, "அடுத்த சீசனுக்கான வலுவான அணியை உருவாக்க வேண்டும்" என்று கூறிவிட்டார்.

Dhoni : 'நாங்கள் நியாயமாக பேட்டிங் ஆடவில்லை!' - சரண்டர் ஆன தோனி

இந்த நிலையில், தோனி குறித்து இந்திய முன்னாள் வீரர் ஆர்.பி. சிங், "தோனியின் 5 ஐ.பி.எல் கோப்பைகளுக்கான கிரெடிட்டும் தோனிக்கு மட்டுமே. ஒரு பவுலரை எப்போது கொண்டுவந்து விக்கெட் எடுக்க வேண்டும் என்று அவருக்குத் தெரியும். ஆண்டுதோறும் அணியை வழிநடத்தி சிறந்த வீரர்களை வெளிக்கொண்டுவருவார்.

ஆர்.பி.சிங்ஆர்.பி.சிங்

தோனியால் இன்னமும் சி.எஸ்.கே-வை வழிநடத்த முடியும். ஆனால், வீரர்கள் நன்றாக இல்லை. நீண்ட நேர மீட்டிங்கில் தோனிக்கு நம்பிக்கை இல்லை. அணியிலிருக்கும் `சர்வதேச வீரர்களுக்கு தங்களின் வேலை என்னவென்று தெரியும்' என்று அடிக்கடி அவர் கூறுவார். முன்கூட்டியே பிளான்கள் எதுவும் அவரிடம் இருக்காது. அவரின் வியூகங்கள் அனைத்தும் களத்தில் போட்டியின் நடுவேதான் எடுக்கப்படும்" என்று கூறினார்.

Dhoni: "தோனி போன்ற ஒரு கேப்டனை பார்க்கவே முடியாது; காரணம்..." - நெகிழ்ந்த அன்ஷுல் கம்போஜ்
Read Entire Article