ARTICLE AD BOX
'கேப்டனாகும் தோனி!'
தோனி மீண்டும் சென்னை அணியின் கேப்டன் ஆகியிருக்கிறார். சென்னை அணியை சரிவிலிருந்து மீட்பாரா? அணியின் பிரச்னைகளையெல்லாம் சரி செய்வாரா என ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு இருக்கிறது.
தோனி'மைக்கும் தோனியும்!'
ஆனால், போட்டியைக் கடந்து போட்டிக்கு முன்பான டாஸின்போதும் போட்டிக்குப் பிறகான பரிசளிப்பு விழாவின்போதும் தோனி மைக் பிடித்து பேசுவதே பெரும் சுவாரஸ்யமாக இருக்கும். நீண்ட நாட்கள் கழித்து இன்று அது நடக்கப்போகிறது என்பதால் ரசிகர்கள் இன்னும் உற்சாகமாக இருக்கின்றனர்.
'ஹர்ஷா போக்ளே பகிர்ந்த அனுபவம்!'
போட்டிக்குப் பிறகான பரிசளிப்பு விழாக்களில் தோனியைப் பேட்டி எடுத்த அனுபவம் ஒன்றை ஹர்ஷா போக்ளே பகிர்ந்திருக்கிறார். 'எப்போதுமே போட்டிக்குப் பிறகான பரிசளிப்பு விழாவில் கேப்டன்களிடம் கேள்வி கேட்கையில், குறிப்பிட்ட நேரத்தில் 'Last Question' என காதுக்குள் நிகழ்ச்சி தயாரிப்பாளர் சொல்லிவிடுவார். அதைமீறி அடுத்த கேள்வியைக் கேட்டால் கொஞ்சம் கோபமாக 'Last Question' என்பார்.
Dhoni: `Red Dragon is Back' - `கேப்டன்' தோனியின் CSK எப்படியிருக்கும்? - இதையெல்லாம் சரிசெய்வாரா?மும்பையில் ஒரு போட்டி முடிந்த பிறகு தோனியிடம் உரையாடிக்கொண்டிருந்தேன். நானும் பேசினேன். தோனியும் பேசினார். இருவரும் பேசிக்கொண்டே இருந்தோம். காதில் 'Last Question' என்பதே கேட்கவில்லை. நிகழ்வை முடித்துவிட்டு தயாரிப்பாளரிடம் சென்று, 'மன்னித்துவிடுங்கள். நீங்கள்,'Last Question' என சொன்னது எனக்குக் கேட்கவில்லைபோல..' என்றேன். அதற்கு, 'நாங்கள் அப்படி சொல்லவே இல்லையே. அது ஒரு பிரச்னையே இல்லையே என்றார்.' என ஹர்ஷா ஒரு சம்பவத்தை பகிர்ந்திருக்கிறார்.
'682 நாட்களுக்கு முன்பு...'
TRP க்காக மட்டுமில்லை. தோனி நிறுத்தவே வேண்டாம் எனும் அளவுக்கு சுவாரஸ்யமாகப் பேசுவார். அணி சம்பந்தமான கேள்வி என்றால் விரிவாக ஆழமாகப் பேசுவார். அதே தனிப்பட்டு அவர் சார்ந்த கேள்வி என்றால் ரத்தினச் சுருக்கமாக 'Definitely Not' என்பது போல குட்டியாக முடித்துக்கொள்வார். ஆனால், அதற்குள்ளும் ஆயிரம் பொருள் இருக்கும்.
Dhoniகடைசியாக 2023 சீசனின் இறுதிப்போட்டியை வென்றுவிட்டு போட்டிக்குப் பிறகான பரிசளிப்பு விழாவில் தோனி மைக் பிடித்துப் பேசியிருந்தார். 'ஓய்வை அறிவிப்பதற்கு இதுதான் சரியான சூழல். கடவுள் அமைத்துக் கொடுத்த ஸ்க்ரிப்ட் போல இருக்கிறது இது. ஆனால், ரசிகர்கள் நான் செல்லும் இடமெல்லாம் அன்பை பொழிந்திருக்கிறார்கள். அவர்களை எளிமையாக நன்றி சொல்லிவிட முடியும்.
ஆனால், இன்னும் கடுமையாக முயன்றால் அவர்களுக்காக ஒரு சீசனிலாவது என்னால் ஆட முடியும். நான் அதை செய்யவே விரும்புகிறேன். நான் விளையாடும் விதம் அத்தனை மரபார்ந்த விதம் கிடையாது. நான் ஆடுவதை போல எல்லாராலும் ஆட முடியும். அதனால்தான் என்னை அவர்களுள் ஒருவராக ரசிகர்கள் தொடர்புப்படுத்திக் கொள்கிறார்கள்.' என உருக்கமாக தோனி பேசியிருந்தார்.
Dhoniஅதற்கு பிறகு 682 நாட்கள் கழித்து இப்போதுதான் தோனி கேப்டனாக மீண்டும் மைக்கை பிடிக்கவிருக்கிறார். ரசிகர்களைப் பற்றி என்ன பேசுவார்? ஓய்வை பற்றி எதுவும் சூசகமாக பேசுவாரா என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் தோனியின் பேச்சு சார்ந்து எழுந்துள்ளது.
2022 சீசனில் ஜடேஜாவை கேப்டன் பதவியிலிருந்து பாதியில் நீக்கிவிட்டு தோனியே மீண்டும் கேப்டனாகியிருப்பார். அப்போது, தோனி மீண்டும் கேப்டனான போட்டியில், 'கேப்டன்சியை ஸ்பூனில் வைத்து ஊட்டிவிட முடியாது.' என ஜடேஜா குறித்து தோனி கடுமையான மதிப்பீட்டே முன்வைத்திருப்பார். இப்போது ருத்துராஜ் நீக்கப்படவில்லை. காயம் காரணமாக விலகிதான் இருக்கிறார். ஆனாலும் ருத்துராஜின் கேப்டன்சியை பற்றி தோனியின் மதிப்பீடு என்னவென்பதை அறியவும் ஆவலாக இருக்கிறது.
Harsha Bhogle - Dhoniபோட்டிக்குப் பிறகான பரிசளிப்பு விழாவுக்கு தோனியை பேட்டி எடுக்க ஹர்ஷா போக்ளே வந்தால் அதை விட சிறப்பான விஷயம் வேறெதுவும் இருக்காது.

8 months ago
8







English (US) ·