Dhoni : CSK வுக்கு தோனி கேப்டனாக வேண்டும் ஏனென்றால்...

8 months ago 8
ARTICLE AD BOX

'சென்னை அணி தோல்வி!'

நடப்பு ஐ.பி.எல் சீசனில் சென்னை அணி மிக மோசமாக ஆடி வருகிறது. தொடர்ச்சியாக 4 போட்டிகளில் தோற்றிருக்கிறது. களத்தில் கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட்டின் வியூகங்கள் எடுபடவே. இல்லை. இந்நிலையில், சென்னை அணிக்கு தோனியே மீண்டும் கேப்டனாக வேண்டும் என ரசிகர்கள் பேசி வருவதை அறிய முடிகிறது.

ருத்துராஜ்ருத்துராஜ்

'ரசிகர்களின் மனநிலை!'

இன்னும் சிலரோ சென்னை அணியின் நிர்வாகம் மிக முக்கியமான ஒரு மீட்டிங்கை நடத்தி ருத்துராஜை கேப்டன் பதவியிலிருந்து நீக்க முடிவு செய்துவிட்டதாகவும் அவருக்குப் பதிலாக அஷ்வினை கேப்டனாக நியமிக்கவிருப்பதாகவும் கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டு வருகின்றனர். எது எப்படியோ ருத்துராஜ் கெய்க்வாட்டை கேப்டன் பதவியிலிருந்து நீக்கிவிட்டு தோனி மீண்டும் கேப்டனாவதோ அல்லது அஷ்வின் கேப்டனாக்கப்படுவதோ சரியான முடிவாக இருக்குமா?

'ருத்துராஜ் கேப்டனான பின்னணி!'

இதற்கு முதலில் ருத்துராஜ் கெய்க்வாட் எந்த சூழலில் கேப்டனாக்கப்பட்டார் என்பதையும் பார்க்க வேண்டும். 2023 சீசனே தோனியின் கடைசி சீசன் போல இருந்தது. ஆடுகின்ற ஒவ்வொரு மைதானத்திலும் ஓய்வு பெறுவதைப் பற்றி சூசகமாக பேசிக்கொண்டே இருந்தார். ஆனால், அந்த சீசனை முடித்துவிட்டு ரசிகர்கள் என் மேல் காட்டிய அன்புக்காக இன்னும் ஒரு சீசனில் ஆடுகிறேன் என்றார். அதன்படி, 2024 சீசனுக்கும் வந்தார்.

தோனிதோனி

ஆனால், சீசன் தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த கேப்டன்களுக்கான போட்டோ ஷூட்டில் தோனி கலந்துகொள்ளவில்லை. அவருக்குப் பதில் ருத்துராஜ் கெய்க்வாட் கலந்துகொண்டார். அப்போதுதான் சென்னை அணி கேப்டனை மாற்றியிருப்பதை குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

'ஜடேஜா உதாரணம்!'

தோனி தன்னுடைய கரியரின் கடைசிக் கட்டத்தில் இருப்பதால் அவருக்குப் பிறகு சென்னை அணியை வழிநடத்த ஒரு ஆள் தேவை எனும் இடத்தில்தான் ருத்துராஜ் தேர்வு செய்யப்பட்டார். இதேமாதிரியான ஒரு விஷயத்தை தோனியும் சென்னை அணியும் இதற்கு முன்பும் செய்திருந்தனர். 2022 சீசனுக்கு முன்பாக இதேமாதிரியே தோனி கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாகவும் இனி ஜடேஜா கேப்டனாக இருப்பார் என்றும் அந்த அணி அறிவித்தது.

JadejaRavindra Jadeja

ஆனால், ஜடேஜா ஒரு பாதி சீசனுக்கு மட்டுமே கேப்டனாக இருந்தார். சென்னை அணி தொடர்ந்து தோற்றது. உடனே தோனி மீண்டும் கேப்டனாகிவிட்டார். 'தலைமைத்துவத்தை ஸ்பூனில் வைத்து ஊட்டிவிட முடியாது!' என ஜடேஜாவை வெளிப்படையாகவே கடுமையாக விமர்சித்திருப்பார். அதன்பிறகுதான் 2023 சீசனில் சென்னையை வழிநடத்தி சாம்பியனாக்குவார்.

'ருத்துராஜ் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டால்..'

இதை மனதில் வைத்துக் கொண்டுதான் தோனி மீண்டும் கேப்டனாக்கப்பட வேண்டும் என்கிற குரலும் ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. ஆனால், இந்த முறை சூழலே வேறு. ருத்துராஜை கேப்டன் பதவியிலிருந்து நீக்கிவிட்டு தோனி மீண்டும் கேப்டன் ஆகினால் அடுத்த மெகா ஏலம் வரைக்கும் தோனி கேப்டனாக இருப்பதுதான் சரியாக இருக்கும்.

CSK : ருத்துராஜ் பிடிவாதத்துக்கு CSK அணி தோற்கலாமா? - தவறுகள் நடப்பது எங்கே?

ஏனெனில், ருத்துராஜை இந்த சீசனில் கேப்டன் பதவியிலிருந்து நீக்கிவிட்டு அடுத்த சீசனில் மீண்டும் கேப்டனாக்க முடியாது. அது பெரும் முரணாக இருக்கும். அதேமாதிரி, இப்போதுள்ள அணியில் ருத்துராஜ் வேண்டாம் என்றால் தோனிதான் கேப்டனாக இருக்க முடியும். வேறு ஆப்சனே இல்லை. அஷ்வினை ஒரு ஆப்சனாக ரசிகர்கள் நினைக்கிறார்கள்.

AshwinAshwin - Dhoni

தமிழக வீரர், கிரிக்கெட்டில் உள்ளார்ந்த அறிவுமிக்கவர் என்ற வகையில் அஷ்வின் நல்ல சாய்ஸ்தான். ஆனால், அவரின் சமீபத்திய பார்ம் சரியல்லை. அவருடைய இப்போதைய பார்முக்கு அவர் அடுத்தடுத்த போட்டிகளில் அணியின் லெவனில் இருப்பாரா என்பதே சந்தேகம்தான். லெவனிலேயே உறுதியாக இல்லாத வீரரை எப்படி கேப்டனாக்க முடியும்? அப்படியெனில், ருத்துராஜை கேப்டன் பதவியிலிருந்து நீக்கினால் தோனிதான் கேப்டனாக வேண்டியிருக்கும்.

அதுபோக 2027 சீசன் வரை அவர் ஆடியே ஆக வேண்டும். அது சாத்தியமா எனும் கேள்வியையும் கேட்டுக் கொள்ள வேண்டும். தோனி முன்பைப் போல உடற்தகுதியோடு இல்லை. அவரால் 2027 வரை ஆட முடியுமா என்பதுமே சந்தேகம்தான்.

'ருத்துராஜ் கேப்டனாக நீடிக்க வேண்டும்!'

மேலும், ருத்துராஜை அவ்வளவு சீக்கிரமாக தூக்கியெறிய வேண்டுமா என்பதையும் யோசிக்க வேண்டும். ஏனெனில், முன்பு ஜடேஜாவுக்கு கேப்டன்சியை கொடுத்தார்கள் இல்லையா? ஜடேஜாவை விட இப்போதைய ருத்துராஜ் நல்ல ஆப்சன்தான். ஜடேஜாவை விட இவர் இளைவர்.

RuturajRuturaj

இன்னும் 5-6 ஆண்டுகளுக்கு அவரால் அணியை வழிநடத்த முடியும். உள்ளூர் போட்டிகளில் கேப்டனாக நன்றாகத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவரது பேட்டிங்கிலும் பெரிய பிரச்சனையில்லை. கேப்டனாக ஐ.பி.எல் இல் மட்டும்தான் இன்னும் க்ளிக் ஆகவில்லை. அதற்கு அவருக்கு கொஞ்ச காலம் கொடுத்துதான் ஆக வேண்டும். மேலும், இப்போதுள்ள அணியே ருத்துராஜ் தேர்ந்தெடுத்த அணியாக இல்லை.

PBKS vs CSK : 'நான் ஓப்பனிங் இறங்கப் போறதில்ல!' - ருத்துராஜ் உறுதி!

கடந்த சீசனில் ருத்துராஜ் வழிநடத்தியது முழுக்க முழுக்க தோனி தேர்ந்தெடுத்து வைத்திருந்த அணி. இந்த சீசனுக்கு மெகா ஏலத்தில் எடுக்கப்பட்டிருக்கும் அணியிலும் தோனியின் பங்களிப்பு அதிகம் இருப்பதை பார்க்க முடிகிறது. ருத்துராஜூம் அணித்தேர்வில் முக்கியமாகத்தான் இருந்திருக்கிறார்.

ஆனால், இப்போதுள்ள சென்னை அணி அவரின் விருப்பப்படி முழுமையாக தேர்ந்தெடுக்கப்பட்ட அணி இல்லை என்பதையும் ஒத்துக்கொண்டுதான் ஆக வேண்டும். தோனி தான் நம்பும் ஸ்டைலின் படி தேர்ந்தெடுத்த வீரர்களை ருத்துராஜ் வேறொரு ஸ்டைலில் வழிநடத்தினால் ரிசல்ட் சென்னை அணி விரும்பாததாகத்தான் இருக்கும்.

தோனிதோனி

உதாரணத்துக்கு ஸ்பின்னர்களை எடுத்துக் கொள்ளலாம். சென்னையின் லெவனில் 3 ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள். தோனி கேப்டனாக இருந்து 3 ஸ்பின்னர்களை வழிநடத்தியிருந்தால் அதன்வழி கிடைக்கும் ரிசல்ட் வேறாக இருந்திருக்கும். ருத்துராஜால் மூன்று ஸ்பின்னர்களை சரியாக ரொட்டேட் கூட செய்ய முடியவில்லை. இந்த மாதிரியான விஷயங்களிலெல்லாம் அவர் தன்னை தகவமைத்துக் கொள்ள காலம் தேவைப்படும்.

ருத்துராஜ்ருத்துராஜ்

தோனி நம்முடைய கற்பனைக்கு எட்டாத உயரத்தில் இருக்கிறார். கிரிக்கெட் உலகம் இதுவரை கண்டிராத அளவுக்கு உச்சத்தில் இருக்கிறார். அவருடைய இடத்தை இன்னொரு இளம் வீரர் அப்படியே நிரப்ப வேண்டும் என்பது ஆபத்தான எதிர்பார்ப்பு. ஆக, ருத்துராஜ் கொஞ்சம் நேரம் எடுத்துக் கொள்ளட்டும். ஒரு Transition Period இல் மேலும் மேலும் மாற்றங்களை செய்வது கூடுதல் குழப்பத்தையே விளைவிக்கும்.

Read Entire Article