Dhoni : 'இன்னும் 5 சீசன் ஆடுற அளவுக்கு கண்ணு நல்லா இருக்கு; ஆனா...' - தோனி வைக்கும் ட்விஸ்ட்

4 months ago 6
ARTICLE AD BOX

சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையின் திறப்பு விழாவில் தோனி கலந்துகொண்டிருந்தார். அதில், உடல் நலன் சார்ந்து நிறைய விஷயங்களை பேசினார். குறிப்பாக, கண்களின் முக்கியத்துவத்தை பற்றி பேசுகையில் அவரின் ஓய்வு குறித்தும் சூசகமாக கூறினார்.

DhoniDhoni

தோனி பேசியதாவது, 'நம்முடைய வாழ்க்கை முறையே மாறியிருக்கிறது. அனைவரும் அதிகமாக மொபைல்களை பயன்படுத்துகிறோம். ஸ்க்ரீன் டைம் அதிகமாகிவிட்டது. குழந்தைகள் கூட அதிகமாக மொபைல்களையும் லேப்டாப்களையும் பயன்படுத்துகிறார்கள். அவர்களுக்கு அதற்கான தேவையும் இருக்கிறது.

Dhoni: "எனக்கு ஊசின்னா பயம்; உடம்புதான் எல்லாமே" - தோனி சொல்லும் ஹெல்த் அட்வைஸ்கள் என்னென்ன?

பள்ளிகளில் கொடுக்கும் ஹோம் ஒர்க்கை செய்ய கூட போனோ லேப்டாப்போ தேவைப்படுகிறது. 10-15 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலையில் இன்றில்லை. இன்று புதிய இயல்பில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.' என்றார்.

DhoniDhoni

மேற்கொண்டு ஓய்வை பற்றி பேசியவர், ''நான் கண் பரிசோதனை செய்துகொண்டேன். 5 ஆண்டுகள் கிரிக்கெட் ஆடும் அளவுக்கு கண் நன்றாக இருப்பதாக மருத்துவர்கள் செர்டிபிகேட் கொடுத்திருக்கின்றனர். ஆனால், கிரிக்கெட் ஆட கண் மட்டும் போதாதே. உடம்பும் தேவையே...' என்றார்.

Dhoni : 'ரிட்டையர் ஆகுறதுக்குன்னு ஒரு வயசு இருக்கு சார்!' - ஓய்வு குறித்து தோனி கொடுத்த அப்டேட்!
Read Entire Article