ARTICLE AD BOX
ஐபிஎல் திருவிழா நடப்பு சாம்பியன் கொல்கத்தா vs பெங்களூரு ஆட்டத்துடன் மார்ச் 22-ம் தேதி தொடங்கியது. முதல் போட்டியில் பெங்களூரு அணியும், இரண்டாவது போட்டியில் ராஜஸ்தானை வீழ்த்தி ஹைதராபாத் அணியும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மூன்றாவது போட்டியில் மும்பை அணியும், சென்னை அணியும் சேப்பாக்கத்தில் மார்ச் 23-ம் தேதி மோதின. இதில், சென்னை அணி 4 வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
Dhoni - csk vs miஅதற்கு மேலாக, எப்போதும் போல தன்னைக் காணக் குவிந்த ரசிகர்களுக்கு, மும்பை கேப்டன் சூர்யகுமார் யாதவை மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்து விருந்தளித்தார் தோனி. இந்த நிலையில், தற்போது கொல்கத்தா அணியில் முக்கிய வீரராக விளையாடிவரும் ரமன்தீப் சிங், 2022-ல் மும்பை அணியில் விளையாடிக்கொண்டிருந்தபோது அப்போதைய கேப்டன் ரோஹித் சர்மா, தோனிக்கெதிராகத் தன்னை பந்துவீசச் சொன்ன அனுபவத்தைப் பகிர்ந்திருக்கிறார்.
ரமன்தீப் சிங்பாட்காஸ்ட் நிகழ்ச்சியையொன்றில் அதை விவரித்த ரமன்தீப் சிங், ``தோனி பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது, ரோஹித் என்னிடம் பந்தைக் கொடுத்து, `ரோஹித் உன் ஓவரை நொறுக்க வேண்டும்' என்று கூறினார். ஏனெனில், அந்த சமயத்தில் அவர்களை ஏழு விக்கெட்டுகளை இழந்திருந்தனர். எனவே, அவர் என் ஓவரை அடித்தாலும் பரவாயில்லை, ஒருவேளை அடிக்க முயன்று விக்கெட்டை இழந்தால் நாங்கள் வெற்றிபெறுவோம்" என்று கூறினார்.
மேலும், ரோஹித்தின் தலைமைப் பண்பு குறித்து பேசுகையில், ``ஒரு அணியில் நீங்கள் இடம்பிடிக்கும்போது, அந்த அணியின் கேப்டனால் மட்டும்தான் உங்களுக்கு சுதந்திர உணர்வைத் தர முடியும். ரோஹித் உண்மையான தலைவர்" என்று ரமன்தீப் சிங் கூறினார்.
Ashuthosh Sharma: ஓரங்கட்டிய பயிற்சியாளர்; அம்பயர் பணி; கைகொடுத்த IPL - யார் இந்த அஷுதோஷ் சர்மா?Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel


9 months ago
8







English (US) ·