ARTICLE AD BOX
சென்னையில் நடந்த தனியார் மருத்துவமனை திறப்பு விழாவில், சிறப்பு விருந்தினராக தோனி கலந்து கொண்டிருந்தார். மருத்துவமனையைத் திறந்து வைத்து விட்டு உடல்நலம் சார்ந்து சில முக்கியமான விஷயங்களை தோனி பேசியிருந்தார்.
தோனிதோனி பேசியதாவது, "அனைவரும் ரெகுலராக ஹெல்த் செக்கப் செய்து கொள்ள வேண்டும். எனக்கு 44 வயதாகிறது. விளையாட்டு வீரராக இருந்தாலும் எனக்கு ஊசி மீது பயம் உண்டு. நானும் ஹெல்த் செக்கப் செய்துகொள்ள வேண்டும்.
முந்தைய தலைமுறையினரிடம் உடல் உழைப்பு அதிகமாக இருந்தது. உணவு முறை நன்றாக இருந்தது. உடலில் எதாவது அசௌகரியம் தோன்றினால் உடனடியாகப் பரிசோதனை செய்யுங்கள். இப்போது மருத்துவத்தில் நிறைய தொழில்நுட்பங்கள் வந்துவிட்டது. எளிதில் நோய்களைக் குணப்படுத்த முடியும். 'Health is Wealth' என்பதை கொரோனா நமக்குக் கற்றுக் கொடுத்துவிட்டது.
தோனிஉங்களுடைய பேரக் குழந்தைகளோடு நேரம் செலவழித்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமெனில் உடல் நலனை நன்றாகப் பார்த்துக்கொள்ளுங்கள். அதுதான் மகிழ்ச்சி" என்றார்.
Dhoni : 'ரிட்டையர் ஆகுறதுக்குன்னு ஒரு வயசு இருக்கு சார்!' - ஓய்வு குறித்து தோனி கொடுத்த அப்டேட்!சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

4 months ago
6







English (US) ·