Dhoni : 'ஒரு சீசனோட விட்றாதீங்க...' - இளம் வீரர்களுக்கு தோனி அறிவுரை!

7 months ago 8
ARTICLE AD BOX

சென்னை தோல்வி!

ராஜஸ்தான் ராயல்ஸூக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி தோற்றிருக்கிறது. இந்தத் தோல்விக்குப் பிறகு சென்னை அணியின் கேப்டன் தோனி சில முக்கியமான விஷயங்களை பேசியிருக்கிறார்.

CSK vs RRCSK vs RR

'தோல்விக்குப் பின் தோனி...'

தோனி பேசியதாவது, 'நாங்கள் எடுத்த ஸ்கோர் நல்ல ஸ்கோர்தான். ஆனால், நிறைய விக்கெட்டுகளை இழந்தோம். இதனால் லோயர் மிடில் ஆர்டர் மீது நிறைய அழுத்தம் ஏற்பட்டது. டெவால்ட் ப்ரெவிஸ் ரிஸ்க் எடுத்து ஆடினார். ஆனாலும் அந்த கடைசிக்கட்ட ஓவர்களில் நாங்கள் இன்னும் கவனம் செலுத்த வேண்டும்.

'இளம் வீரர்களுக்கு அறிவுரை!'

அன்ஷூல் கம்போஜ் இன்று நன்றாக வீசினார். தொடர்ந்து 3 ஓவர்களை வீசினார். இளம் வீரர்களிடம் அந்த 'Consistency' யைத்தான் எதிர்பார்க்கிறேன். 200+ ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடும்போது சீராக ஆட முடியாதுதான். ஆனாலும் கவனமாக இருக்க வேண்டும். ஒரு சீசனில் நன்றாக ஆடிவிட்டால், நிறைய பேர் நம்மைப் பற்றி பேசுவார்கள். நம் மீது எதிர்பார்ப்புகள் அதிகமாகும். அழுத்தமும் கூடும்.

தோனிதோனி

அதையெல்லாம் சமாளித்து 'Consistency' யோடு ஆட வேண்டும். வைபவ் சூர்யவன்ஷி, ஆயுஷ் மாத்ரே போன்ற இளம் வீரர்களுக்கு என்னுடைய அறிவுரை இதுதான்.' என்றார்.

Dhoni : 'பெருமைக்காக ஆடி எந்தப் பலனும் இல்லை' - டாஸில் தோனி பளிச் பேச்சு
Read Entire Article