Dhoni: "ஒரு விஷயம் நடப்பதற்கு முன்பாகவே..." - தோனி குறித்த சுவாரஸ்யம் பகிர்ந்த டெவால்ட் ப்ரெவிஸ்

7 months ago 8
ARTICLE AD BOX

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் சீசனில் மோசமாகச் செயல்பட்டு, முதல்முறையாக புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தோடு விடைபெற்றிருந்தாலும், கிட்டத்தட்ட அடுத்த சீசனுக்கான இளம் அணியை உருவாக்கியிருப்பதாகவே தெரிகிறது.

ஆயுஷ் மாத்ரே, உர்வில் படேல், டெவால்ட் ப்ரெவிஸ், ஷேக் ரஷீத், அன்ஷுல் ஜம்போஜ் ஆகிய இளம் வீரர்கள் சென்னை அணியின் நம்பிக்கைகளாக நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள்.

டெவால்ட் ப்ரெவிஸ்டெவால்ட் ப்ரெவிஸ்

இந்த நிலையில், 2022 முதல் 3 சீசன்களாக மும்பை அணியில் ஆடி, நடப்பு சீசனுக்கு முன்பாக மெகா ஏலத்தில் அன்சோல்ட் ஆகி, பின்னர் சிஎஸ்கே-வில் மாற்று வீரராகக் களமிறங்கி அடுத்த சீசனில் தனக்கான இடத்தை அணியில் உறுதிசெய்யும் வகையில் ஆடிய டெவால்ட் ப்ரெவிஸ் (IPL 2025 - 6 போட்டிகள் 225 ரன்கள்), தோனிக்குப் புகழாரம் சூட்டியிருக்கிறார்.

டாக்ஸ்போர்ட் (talkSPORT) என்ற ஸ்போர்ட்ஸ் ரேடியோ சேனலிடம் பேசிய டெவால்ட் ப்ரெவிஸ், "தோனி ஒரு நம்பமுடியாத வீரர். எந்த வீரர்களைக் காட்டியிலும் அவர் ஃபிட்டாக இருப்பதை நான் பார்த்திருக்கிறேன்.

அவர் உங்களுக்காக நேரம் ஒதுக்கிவைத்திருப்பார். அவருடன் பேச, அரட்டை அடிக்க, கிரிக்கெட், வாழ்க்கை என எதைப்பற்றி பேசவும் எப்போதும் நீங்கள் வரவேற்கப்படுவீர்கள்.

டெவால்ட் ப்ரெவிஸ், தோனிடெவால்ட் ப்ரெவிஸ், தோனி

அவர் உண்மையில் லிவிங் லெஜெண்ட். அவரின் விளையாட்டு நுணுக்கங்கள் அபாரமானவை. தொலைநோக்குப் பார்வை உடையவர்.

ஒரு விஷயம் நடப்பதற்கு முன்பாகவே அவரால் அதைக் கணிக்க முடியும். அவரிடமிருந்து கற்றுக்கொள்வதும் அவருடன் விளையாடுவதும் மிகப்பெரிய விஷயம்" என்று தோனியைப் புகழ்ந்தார்.

IPL 2025: "RCB கப் ஜெயிக்கலனா கணவரை விவாகரத்து செய்வேன்" - வைரலாகும் பெங்களூரு பெண் ரசிகை சபதம்
Read Entire Article