Dhoni : 'கொல்கத்தாவும் என்னோட சொந்த ஊர்தான்!' - ஈடன் கார்டனில் நெகிழ்ந்த தோனி

7 months ago 8
ARTICLE AD BOX

'கொல்கத்தா vs சென்னை!'

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி ஈடன் கார்டனில் நடந்து வருகிறது. இந்தப் போட்டிக்கான டாஸை கொல்கத்தா அணியின் கேப்டன் ரஹானே வென்றார். முதலில் பேட் செய்யப்போவதாக அறிவித்தார்.

ஈடன் கார்டன்ஈடன் கார்டன்

'தோனி பேசியவை!'

டாஸில் தோனி பேசுகையில், 'இங்கே கொல்கத்தாவில் நான் நிறைய போட்டிகளில் ஆடியிருக்கிறேன். U16, U19, க்ளப் லெவல் போட்டிகள், பிராந்திய அளவிலான போட்டிகள் என ஈடன் கார்டனிலும் அதைச் சுற்றியிருக்கும் பகுதிகளிலும் நிறைய ஆடியிருக்கிறேன்.

இதுவும் எனக்கு சொந்த ஊர் போன்றதுதான். தொடரிலிருந்து வெளியேறியிருப்பது எங்களுக்கு புதிய வீரர்களை பயன்படுத்துவதற்கான சௌகரியத்தைக் கொடுத்திருக்கிறது. அடுத்த சீசனுக்கான விடையை நாங்கள் எஞ்சியிருக்கும் போட்டிகளில் தேட வேண்டும்.

தோனிதோனி

இன்றைய போட்டியில் இரண்டு மாற்றங்களைச் செய்திருக்கிறோம். ஷேக் ரஷீத், சாம் கரண், தீபக் ஹூடா ஆகியோருக்கு பதிலாக உர்வில் படேலையும் கான்வேயையும் அஷ்வினையும் எடுத்திருக்கிறோம்.' என்றார்.

'நாங்கள் எதையும் போட்டு குழப்பிக் கொள்ளாமல் ஒவ்வொரு போட்டியாகத்தான் அணுகப் போகிறோம்.' என கொல்கத்தாவின் கேப்டன் ரஹானே பேசியிருந்தார்.

Urvil Patel : 'அதிரடி பேட்டர்; அசத்தல் கீப்பர்!'- சிஎஸ்கேவின் புதிய வீரர்; யார் இந்த உர்வில் படேல்?
Read Entire Article