Dhoni : 'சேப்பாக்கத்தில் முதல் முறையாக தோனியின் பெற்றோர்!' - முக்கிய முடிவை அறிவிக்கிறாரா தோனி?

8 months ago 8
ARTICLE AD BOX

சேப்பாக்கத்தில் நடைபெறும் சென்னை Vs டெல்லி போட்டியை காண தோனியின் பெற்றோர் ராஞ்சியிலிருந்து வந்திருக்கின்றனர். தோனியின் கரியரில் அவருடைய பெற்றோர் பெரிதாக எந்தப் போட்டியையும் நேரில் கண்டதே இல்லை. இந்நிலையில், திடீரென அவர்கள் சேப்பாக்கத்துக்கு வந்திருப்பது தோனி எதுவும் முக்கிய முடிவை அறிவிப்பாரா எனும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Dhoni ParentsDhoni Parents

கடந்த போட்டியில் ருத்துராஜ் காயமடைந்ததால் டெல்லிக்கு எதிரான இந்தப் போட்டியில் தோனி கேப்டனாக இருப்பார் என்பது போல தகவல் வெளியாகியிருந்தது. 'எங்கள் அணியில் ஸ்டம்புகளுக்கு பின்னால் ஒரு இளம் விக்கெட் கீப்பர் இருக்கிறார். அவர் கேப்டனாக இருக்கலாம்.' என சென்னையின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸியும் அதை உறுதிப்படுத்துவதை போல பேசியிருந்தார். ஆனால், ருத்துராஜ் குணமடைந்துவிட்டதால் அவரே கேப்டனாக வந்தார். சென்னை அணி சேஸிங் செய்கிறது.

இந்நிலையில்தான் தோனியின் பெற்றோர், மனைவி, மகள் என ஒட்டுமொத்த குடும்பத்தினரும் சேப்பாக்கத்துக்கு இந்தப் போட்டியை காண வந்திருக்கின்றனர்.

தோனியின் பெற்றோருக்கு தோனி ஆடும் போட்டிகளை நேரில் பார்க்கும் வழக்கம் இருந்ததில்லை. 2011 உலகக்கோப்பை இறுதிப்போட்டியை கூட அவர்கள் நேரில் பார்த்ததில்லை. அப்படியிருக்க அவர்கள் சேப்பாக்கத்துக்கு வந்திருப்பதை வைத்து தோனி அவரது ஓய்வை பற்றி அறிவிக்கக்கூடும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Shakshi's Insta StoryShakshi's Insta Story

ஆனால், சேப்பாக்கம் வட்டாரத்தில் நாம் விசாரித்தவரைக்கும் இன்று தோனி எந்த அறிவிப்பையும் வெளியிடமாட்டார். அதேநேரத்தில், இதுதான் அவரின் கடைசி சீசனாக இருக்கும் என்றும் கூறுகின்றனர்.

தோனி சர்ப்ரைஸ்களுக்கு பெயர் போனவர். என்ன செய்யப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..

Read Entire Article