Dhoni: ``தயாராக இருக்கும்போதுதான் தன்னம்பிக்கை வரும்'' - மாணவர்களிடையே பேசிய தோனி

3 weeks ago 2
ARTICLE AD BOX

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, குஜராத் மாநிலம் வடோதராவில் உள்ள பருல் பல்கலைக்கழகத்தில் நடந்த மிஷன் பாசிபில் நிகழ்வில் கலந்துகொண்டுள்ளார். அவருடன் தொகுப்பாளர் மணீஷ் பால் மற்றும் நகைச்சுவை நடிகர் கிகு ஷார்தா ஆகியோரும் இணைந்துள்ளனர்.

குஜராத்தில் தோனி தங்கியிருந்த ஹோட்டல் அறை, அவரது கார் என எல்லாப் பக்கமும் ரசிகர்கள் சூழ்ந்தனர்.

This night had its own pulse.
Maniesh Paul’s fire hosting, Kiku Sharda’s chaos comedy, and Dhoni’s calm magnetism energy kept rising, crowd kept roaring. Mission Possible 2025 felt bigger than a stage. pic.twitter.com/JUYBLDLDiT

— Parul University (@ParulUniversity) December 2, 2025

Dhoni பேச்சு

பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் தோனிக்கு பலத்த வரவேற்பு வழங்கப்பட்டது. மாணவர்கள் கூச்சலும் கைதட்டலுமாக ஆரவாரம் செய்தனர். கையில் பேட்டுடன் என்ட்ரி கொடுத்த தோனி, மணீஷ் மற்றும் கிகுவுடன் கலந்துரையாடினார்.

மாணவர்களிடையே தன்னம்பிக்கையை அதிகரிப்பது குறித்து பேசிய அவர், “தயாராக இருக்கும்போதுதான் தன்னம்பிக்கை வரும். அதற்காக நீங்கள் தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டும். வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகள் இருக்கும், ஆனால் ஒருபோதும் விட்டுக்கொடுக்கக்கூடாது,” என்றார்.

மேலும், நகைச்சுவையாளருடன் கலகலப்பாக உரையாடி மகிழ்ந்துள்ளார். மாணவர்கள் இருசக்கர வாகனம் இயக்கும்போது தலைக்கவசம் அணிய அறிவுறுத்தியதுடன், சிறிய தவறு கூட பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடலாம் என அறிவுறுத்தினார்.

அன்பின் மழையில் தல!

Dhoni, Maniesh Paul, Kiku Sharda

தோனியைப் பார்க்க ஏராளமான மக்கள் போஸ்டர்கள், புகைப்பட ஃப்ரேம்கள் மற்றும் பதாகைகளுடன் வந்ததால், பல்கலைக்கழகம் ரசிகர்களால் நிரம்பியிருந்தது.

2019ஆம் ஆண்டே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருந்தாலும், தொடர்ந்து ஐபிஎல்லில் விளையாடி வருகிறார் எம்.எஸ். தோனி.

அன்கேப்ட் வீரராக களமிறங்கும் அவருக்கு ஆண்டுக்கு ஆண்டு அதிக அன்பைப் பொழிகின்றனர் ரசிகர்கள். தோனியின் மீதான க்ரேஸ் துளியும் குறையவில்லை என்பதற்கு, பல்கலைக்கழகத்தில் நடந்த இந்தச் சம்பவம் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

Siraj: "ஒரு மேட்ச்சில் ஹீரோ, அடுத்ததில் ஜீரோ" - தோனி சொன்ன அந்த அட்வைஸ்!
Read Entire Article