ARTICLE AD BOX
சிஎஸ்கே அணியின் செயல்பாடு, நடப்பு ஐபிஎல் சீசனில் மற்ற அனைத்து அணிகளை விடவும் மிக மோசமாக இருக்கிறது. புள்ளிப்பட்டியலில் சென்னைக்கு அடுத்தபடியாக கடைசி இடத்தில் ஹைதராபாத் இருந்தாலுமே, அவர்களாவது ஒவ்வொரு ஆட்டத்திலும் அடித்து ஆட வேண்டும் என்ற இன்டன்ட்டை வெளிப்படுத்தி விக்கெட்டுகளைப் பறிகொடுத்து தோற்கின்றனர். ஆனால், சென்னை அணியோ பவர்பிளேயில் தடுமாறுகிறது, மிடில் ஆர்டரில் ஹார்ட் ஹிட்டர் இன்றி திணறுகிறது மொத்தமாக ஜெயிக்க வேண்டும் என்ற இன்டன்ட் கூட வெளிப்படுத்தாமல் ஆடுகிறது.
ருத்துராஜ்இத்தகைய சூழலில்தான், சென்னை கேப்டன் ருத்துராஜ் முழங்கை ஏற்பட்ட காயம் காரணமாக ஐ.பி.எல் தொடரிலிருந்தே விலக தோனி மீண்டும் கேப்டனாகியிருக்கிறார். இதுவரை ஐந்து போட்டிகளில் முதல் போட்டியில் மட்டும் வெற்றிபெற்று கடைசி நான்கு போட்டிகளிலும் தோல்வியடைந்திருக்கும் சி.எஸ்.கே-வை மீட்டுக் கொண்டுவருவது, அதுவும் டாப் ஆர்டர், மிடில் ஆர்டரில் ஏகப்பட்ட சிக்கல்களைக் கொண்ட அணியை மீட்டுக் கொண்டுவருவது தோனிக்கு நிச்சயம் மிகப்பெரிய டாஸ்க்தான்.
Dhoni: `Red Dragon is Back' - `கேப்டன்' தோனியின் CSK எப்படியிருக்கும்? - இதையெல்லாம் சரிசெய்வாரா?இந்த நிலையில், தோனியைக் கேப்டனாக நியமிக்கப்பட்ட போதும் அணியிலிருக்கும் சிக்கல் குறித்து சி.எஸ்.கே முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா வெளிப்டையாகப் பேசியிருக்கிறார்.
பெங்களூரு vs டெல்லி ஆட்டத்துக்குப் பிறகு பேசிய ராபின் உத்தப்பா, "தோனி கேப்டனாக இருப்பதாலேயே, சி.எஸ்.கே-வின் நிலை தானாக சரியாகிவிடும் என்று நான் நினைக்கவில்லை. அணியில் நிறைய ஓட்டைகள் இருக்கின்றன. அதை எப்படி சரிசெய்யப்போகிறீர்கள்?
தோனி - பிளெமிங்ருத்துராஜ் போன்ற வீரரின் இடத்தை எப்படி நிரப்புவீர்கள்? கடந்த போட்டியில் டெவான் கான்வே ஓரளவு நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரச்சின் கொஞ்சம் தடுமாறி வருகிறார். எனவே, இப்பொது திரிபாதி உங்களிடம் இருக்கிறார். அவரை ஒன்டவுனில் இறக்கலாம் என நான் நினைக்கிறேன்" என்று கூறினார்.
தோனி கேப்டனாக வந்திருப்பது சி.எஸ்.கே அணியில் பாசிட்டிவ் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது குறித்து உங்களின் கருத்துக்களை கமெண்ட்டில் பதிவிடுங்கள்.
Dhoni : '682 நாட்களுக்குப் பிறகு' - மைக் பிடிக்கும் தோனி; காத்திருக்கும் சுவாரஸ்யம்
8 months ago
8







English (US) ·