Dhoni: `தோனியிடம் இதைச் சொல்ல CSK பயிற்சியாளர்களுக்கு தைரியம் இல்லை’ - இந்திய முன்னாள் வீரர் பளீச்

9 months ago 9
ARTICLE AD BOX

ஐபிஎல் ரசிகர்களின் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய போட்டிகளில் ஒன்றான சி.எஸ்.கே vs ஆர்.சி.பி போட்டி சேப்பாக்கத்தில் நேற்று (மார்ச் 28) நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற சி.எஸ்.கே கேப்டன் ருத்துராஜ் முதலில் பந்துவீசுவதாகத் தெரிவித்தார். அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ஆர்.சி.பி அணி, பிலிப் சால்ட், ரஜத் பட்டிதார், டிம் டேவிட் ஆகியோரின் அதிரடியால் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது.

cskcsk

அதைத்தொடர்ந்து, 197 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கிக் களமிறங்கிய சி.எஸ்.கே அணியில், ரச்சின் ரவீந்திரவைத் தவிர மற்ற வீரர்கள் வருவதும், பெவிலியன் திரும்புவதுமாகவே இருந்தனர். இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் மட்டுமே எடுத்து 50 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியைப் பதிவுசெய்தது சி.எஸ்.கே. அதிலும், 13-வது ஓவரில் அணியின் 6-வது விக்கெட்டாக ஷிவம் துபே அவுட்டானபோது, மீத 7 ஓவர்களில் வெற்றிக்கு 117 ரன்கள் தேவைப்பட்டபோது, தோனி களமிறங்காமல் அஸ்வின் களமிறங்கினார்.

CSK vs RCB : 'டார்கெட் மட்டும் 170 க்குள்ள இருந்திருந்தா கதையே வேற' தோல்விக்குப் பின் ருத்துராஜ்

சி.எஸ்.கே பயிற்சியாளர்களுக்குத் தைரியமில்லை

பின்னர், அவர் அவுட்டான பிறகு, மேட்ச் கைவிட்டு போன பிறகு 16-வது ஓவரில் களமிறங்கி 16 பந்துகளில் 30 ரன்கள் அடித்தார் தோனி. இதனால், அணிக்கு தேவைப்பட்ட நேரத்தில் தோனி களமிறங்காதது கடும் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது. இவாற்றிருக்க, இந்திய அணியின் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி இந்த விஷயத்தில் தனது கருத்தைப் பதிவு செய்திருக்கிறார்.

தோனி - சிஎஸ்கேதோனி - சிஎஸ்கே

ஸ்போர்ட்ஸ் ஊடகத்திடம் தோனியின் பேட்டிங் வரிசை குறித்து பேசிய மனோஜ் திவாரி, ``16 பந்துகளில் 30 ரன்கள் அடிக்க கூடிய தோனி போன்ற வீரரை ஏன் முன்பாகவே களமிறக்கவில்லை என்பது எனக்குப் புரியவில்லை. வெற்றி பெறுவதற்காகத்தானே நீங்கள் விளையாடுகிறீர்கள். இங்கு, தோனியை பேட்டிங் ஆர்டரில் முன்னால் இறங்கச் சொல்ல சி.எஸ்.கே பயிற்சியாளர்களுக்குத் தைரியமில்லை. தோனி முடிவெடுத்தால், முடிவெடுத்துதான்" என்று கூறினார்.

நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ஆர்சிபி, 2008-க்குப் பிறகு சரியாக 6,155 நாள்களுக்குப் பிறகு சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே-வுக்கெதிராகத் தனது வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

CSK vs RCB: `என்ன ஆச்சு CSK?' தோல்விக்கான அந்த 3 காரணங்கள்
Read Entire Article