Dhoni: `தோனியின் கடைசி ஐபிஎல் சீசன் எது...' - கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்தின் அளித்த பதில் என்ன?

9 months ago 9
ARTICLE AD BOX

தோனி கடைசியாக சர்வதேச கிரிக்கெட் விளையாடியது 2019-ல். அதன்பிறகு ஐ.பி.எல்லில் மட்டுமே ஆடிவருகிறார். வருடம் முழுக்க தேசிய அணியை சப்போர்ட் செய்துவரும் இந்திய ரசிகர்கள், மார்ச் மாதம் ஐ.பி.எல் வந்துவிட்டால் அடுத்த இரண்டு மாதம் தோனி என்ற ஒற்றை மனிதரைக் கொண்டாடித் தீர்க்கின்றனர். இத்தனைக்கும், கடந்த சீசனில் பெரும்பாலான ஆட்டங்களில் கடைசி இரண்டு ஓவர்களில் மட்டுமே தோனி பேட்டிங் இறங்கினார். அப்படியிருந்தும், தோனியின் அந்த 10 நிமிட பேட்டிங்கைக் காண வேண்டும் என ஸ்டேடியத்தில் ரசிகர்கள் குவிந்தனர்.

தோனிதோனி

இதற்கிடையில், இதுதான் தோனியின் கடைசி சீசன் என்று கடந்து இரண்டு மூன்று வருடங்களாக விளம்பரங்கள் வேறு. இப்படியான, பரபரப்புக்கு மத்தியில் ஐ.பி.எல் 18-வது சீசனுக்கு தோனி தயாராகிவிட்டார். சென்னை அணி தனது முதல் போட்டியில் சேப்பாக்கத்தில் மும்பையை எதிர்கொள்கிறது. இவ்வாறிருக்க, வழக்கம் போல இதுதான் தோனியின் கடைசி சீசனா என்ற பரபரப்பும் தொற்றிக்கொண்டது. அதற்கேற்றவாறு தோனியும், `ஒன் லாஸ்ட் டைம்' என்று மோர்ஸ் குறியீட்டில் (Morse Code) பொறிக்கப்பட்ட டீ-ஷர்ட்டுடன்தான் சென்னை வந்திறங்கினார்.

இந்த நிலையில், தோனியின் கடைசி சீசன் என்ற பேச்சு குறித்து இந்திய முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் பேசியிருக்கிறார். நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் இந்த கேள்விக்குப் பதிலளித்த ஸ்ரீகாந்த், ``இன்றைக்கும் கீப்பிங்கில் தோனி நம்பர் ஒன். தோனி கேப்டன்சி மாதிரி வருமா... ருத்துராஜ் கேப்டனாக இருந்தாலும் பின்னாடி இருந்து தோனி அட்வைஸ் கொடுக்றாரு. இதுபோதும் இதுக்கு மேல என்ன வேணும். அவருடைய கடைசி மேட்ச் எதுவென்று யாருக்கும் தெரியாது. தன்னுடைய கடைசி போட்டியை சென்னையில் ஆடுவதுதான் தனது கனவென்று அவர் கூறியிருக்கிறார்.

கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்

அந்தக் கடைசி மேட்ச் 2025-ஆ, 2026-ஆ, 2027-ஆ என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். நேரில் அவரிடம் ஜாலியாக பேசுவேனே தவிர, அவரின் பெர்சனல் விஷயங்களைப் பற்றி பேசமாட்டேன். ஐபிஎல்லில் சென்னையும், மும்பையும்தான் என் ஃபேவரைட். ஆர்.சி.பி-யையும் புடிக்கும். ஹைதராபாத் கடந்த இரண்டு ஆண்டுகளாக நன்றாக விளையாடுகிறது." என்று கூறினார்.

IPL: பேட்ஸ்மேன்களுக்கு தொல்லை தரப்போகும் பவுலிங் யூனிட் எது? | Bowling SWOT Analysis
Read Entire Article