Dhoni: ``நான் எப்போதும் தோனி ரசிகராகத்தான் இருப்பேன்'' - விமர்சனத்திற்கு அம்பத்தி ராயுடு பதிலடி

8 months ago 8
ARTICLE AD BOX

தோனிக்கு ஆதரவாக பேசியதற்காக விமர்சிக்கப்பட்டு வரும் அம்பத்தி ராயுடு இன்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

கடந்த 8 ஆம் தேதி சண்டிகரில் பஞ்சாப் அணியை எதிர்கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அந்தப் போட்டியில் வர்ணனையாளராக இருந்த அம்பத்தி ராயுடு தோனி வருகையின்போது பயங்கரமாக வர்ணித்திருந்தார்.

அம்பத்தி ராயுடு, தோனிஅம்பத்தி ராயுடு, தோனி

அந்த போட்டியில் விளையாடிய தோனி 12 பந்தில் ஒரு பவுண்டரி மற்றும் மூன்று சிக்ஸர்களுடன் 27 ரன்கள் விளாசினார். எனினும் கடைசி ஓவரின் முதல் பந்திலேயே அவர் அவுட் ஆக, 18 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி தோற்றது.

இதனிடையே தோனி குறித்து அம்பத்தி ராயுடு வர்ணித்த வீடியோ இணையத்தில் வைரலாகப் பலரும் அவரை விமர்சித்து வந்தனர்.

``RCB ரசிகர்கள் அணியை விமர்சிக்கலாம்; ஆனால், கைவிட்டு விடக்கூடாது..'' - அஷ்வின் கருத்து

இந்நிலையில் தன் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இன்று பதிலளித்திருக்கிறார் அம்பத்தி ராயுடு.

இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நான் ஒரு தோனி ரசிகராக இருந்தேன். தோனி ரசிகராக இருந்து கொண்டிருக்கிறேன். எப்போதும் தோனி ரசிகராகவே இருப்பேன்.

தோனி தோனி

யார் என்ன சொன்னாலும், என்ன நினைத்தாலும் அது பற்றி கவலையில்லை. இதனால் ஒரு சதவீதம் கூட மாற்றம் நிகழப்போவதில்லை. எனவே தயவுசெய்து பணம் செலுத்திய PR-க்கு பணத்தை செலவிடுவதை நிறுத்திவிட்டு, அதைத் தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்குங்கள். பல பின்தங்கிய மக்கள் பயனடையலாம்” என அம்பத்தி ராயுடு தெரிவித்திருக்கிறார்.

I was a Thala’s fan
I am a Thala’s fan
I will always be a Thala’s fan.

No matter what anyone thinks or does. It will not make a one percent difference.

So please stop spending money on paid pr and donate that to charity. Lot of underprivileged people can benefit.

— ATR (@RayuduAmbati) April 10, 2025

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Read Entire Article