ARTICLE AD BOX
ஐபிஎல் 2025 போட்டிகள் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்கி மே 25ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 2024 இறுதியில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் ஒவ்வொரு அணிகளும் தங்களுக்கு வேண்டிய வீரர்களை ஏலத்தில் எடுத்திருக்கின்றனர். இந்த தொடரில் ருதுராஜ் தலைமையில் சிஎஸ்கே அணி ஆறாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து இருக்கிறது.
cskசிஎஸ்கே வீரர்கள் சென்னைக்கு வந்து பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ், தோனி குறித்து பேசியிருக்கிறார். நேர்காணல் ஒன்றில் பேசிய ருதுராஜ், "கடந்த வருடம் ஐபிஎல் தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன் எம்.எஸ்.தோனி என்னிடம் வந்து, `இந்த வருடம் நான் அணியை வழிநடத்தப் போவதில்லை.
நீதான் கேப்டன்' என்றார். முதல் போட்டியில் இருந்தே நான்தான் வழிநடத்த வேண்டுமா? என கேட்டதற்கு, `இது உன்னுடைய அணி, நீதான் சொந்த முடிவுகளை எடுக்க வேண்டும், நான் இதில் தலையிட மாட்டேன். ஃபீல்டிங்கில் 50% நீயும் 50% நானும் பார்த்து கொள்ளலாம்.
Ruturaj Gaikwadஇருந்தாலும் என் அறிவுரையை கேட்க வேண்டும் என்ற கட்டாயம் அல்ல' என்றார். அந்த நம்பிக்கை மிகப்பெரியது!" என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.
Dhoni: `One Last Time' - தோனிக்கு இதுதான் கடைசி சீசன்? சென்னை வந்த தோனியின் டி-ஷர்ட்டில் Morse Codeசினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

9 months ago
8







English (US) ·