Dhoni: 'ருதுராஜ் வெளியேறியது சோகமான விஷயம்தான், ஆனால் தோனியின் மேஜிக்...' - அம்பத்தி ராயுடு

8 months ago 8
ARTICLE AD BOX

ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் முதல் போட்டியில் மும்பையை வீழ்த்திய சிஎஸ்கே, அதற்கடுத்த 4 போட்டிகளில் வரிசையாகத் தோற்றியிருக்கிறது.

இதனிடையே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு முழங்காலில் ஏற்பட்ட காயத்தால் இந்த ஐபிஎல் தொடரில் எஞ்சிய போட்டிகளிலிருந்து வெளியேறி இருக்கிறார். அவருக்குப் பதிலாக தோனி எஞ்சிய 9 போட்டிகளில் கேப்டனாக விளையாடுவார் என்று அணி நிர்வாகம் அறிவித்திருக்கிறது.

தோனி, ருதுராஜ்

இந்நிலையில் ருதுராஜ் போன்ற தரமான பேட்ஸ்மேன் காயத்தால் விலகியுள்ளது சென்னைக்கு சோகமான விஷயம்தான். ஆனால் தோனி மீண்டும் கேப்டனாகச் செயல்படுவது சுவாரசியத்தை ஏற்படுத்தும் என்று முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக பேசியிருக்கும் அவர், ``கேப்டன் ருதுராஜ் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியுள்ளது, சோகமான விஷயம்தான். ஆனால் அனைத்து ரசிகர்களும் கண்டிப்பாக எம்.எஸ்.தோனி மீண்டும் சிஎஸ்கே அணியை தலைமைத் தாங்குவதைப் பார்க்க உற்சாகத்துடன் இருப்பார்கள்.

தோனிதோனி

அவர் எப்போதும் தன்னுடைய மேஜிக்கை நிகழ்த்துவார். சிஎஸ்கே அணியை இங்கிருந்து பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வைப்பார். அது ஒரு மகத்தானக் கதையாக இருக்கும். அதனால் இங்கிருந்து சிஎஸ்கே ஆட்டத்தைப் பார்க்க நான் உற்சாகமாக இருக்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

RCB vs DC: "இது என் ஊரு; என்னோட கிரவுண்டு" - வெற்றி பின் ஆட்டநாயகன் கே.எல். ராகுல் பேசியது என்ன?
Read Entire Article