Dhoni : 'ருத்துராஜ் வலியோடு ஆட நினைத்தார்...ஆனாலும்' - கேப்டன்சி மாற்றம் குறித்து ப்ளெம்மிங்

8 months ago 8
ARTICLE AD BOX

'ப்ளெம்மிங் பத்திரிகையாளர் சந்திப்பு!'

ருத்துராஜ் கெய்க்வாட்டுக்கு காயம் ஏற்பட்டிருக்கும் நிலையில், அவருக்குப் பதில் எஞ்சியிருக்கும் போட்டிகளில் தோனி கேப்டனாக செயல்படுவார் என அணியின் பயிற்சியாளர் ப்ளெம்மிங் அறிவித்திருக்கிறார். கேப்டன்சி மாற்றம் குறித்து ப்ளெம்மிங் பேசியவை இங்கே.

FlemmingFlemming

'புதிய கேப்டன் தோனி!'

பத்திரிகையாளர் சந்திப்பு அறைக்குள் வந்தவுடனேயே, 'துரதிஷ்டவசமாக ருத்துராஜ் இந்தத் தொடரிலிருந்து விலகுகிறார். முழங்கையில் அவருக்கு ஏற்பட்டிருக்கும் காயத்திலிருந்து மீள கவுஹாத்தி சென்றிருக்கிறார். அவர் ஆட வேண்டும் என்றுதான் நினைத்தார். ஆனால், முடியவில்லை

எங்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம்தான். அவருக்காக வருந்துகிறோம். எங்கள் Uncapped வீரராக இருக்கும் தோனி எஞ்சியிருக்கும் போட்டிகளில் அணியை வழிநடத்துவார்.' என ப்ளெம்மிங் கூறினார்.

RuturajRuturaj

ப்ளெம்மிங் மேலும் பேசுகையில், 'ருத்துராஜால் தொடருந்து ஆட முடியாத சூழலில் அணியின் நிலைமையையும் தேவையையும் உணர்ந்து தோனி கேப்டன் ஆவதற்கு எந்த தயக்கமுமின்று ஒத்துக்கொண்டார். எங்கள் அணியால் இயலும்பட்சத்தில் எங்களை இந்த சரிவிலிருந்து மீட்க தோனி வழிகாட்டுவார்.' எனக் கூறினார்.

DhoniDhoni

ருத்துராஜூக்கு பதில் ரீப்ளேஸ்மெண்ட்டாக வேறு எதாவது வீரர்களை எடுப்பீர்களா? எனும் கேள்விக்கு, 'எங்கள் அணியிலேயே சிறந்த வீரர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். முதலில் அவர்களை முயன்று பார்க்கவே விரும்புகிறோம்.' என்றார்.

Read Entire Article