ARTICLE AD BOX
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று (ஏப்ரல் 8) நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், லக்னோ அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி தனது மூன்றாவது வெற்றியைப் பதிவுசெய்தது.
முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி, பிட்ச் பேட்டிங்குக்கு சாதகமாக இருப்பதை தனக்கு சாதகமாக்கி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் குவித்தது.
அதையடுத்து, 239 என்ற இலக்கு கொல்கத்தாவுக்கு கடினமான இலக்காகத் தெரிந்தாலும், பிட்ச் இவர்களின் பேட்டிங்குக்கும் உதவியது. 13 ஓவர்களிலேயே 3 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் குவித்த கொல்கத்தா, அடுத்தடுத்த ஓவர்களில் தொடர்ச்சியாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்தாதல் இலக்குக்கு மிக நெருக்கமாக வந்து 4 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
திக்வேஷ் சிங் ரதிலக்னோ அணியில் அதிரடியாக 36 பந்துகளில் 87 ரன்கள் அடித்த நிகோலஸ் பூரான் ஆட்ட நாயகன் விருது வென்றார். இந்த நிலையில், கடந்த போட்டிகளில் விக்கெட் செலிபிரேஷனால் அபாரதத்துக்குள்ளான லக்னோவின் 25 வயது இளம் ஸ்பின்னர் திக்வேஷ் சிங் ரதி, நேற்றைய போட்டியில் மீண்டும் அதே செலிபிரேஷனை செய்தது தற்போது விவாதப்பொருளாக மாறியிருக்கிறது.
KKR Vs LSG: அதிரடி காட்டிய பூரன், மார்ஷ்; இறுதிவரை போராடிய ரிங்கு சிங் - 472 ரன்களை தொட்ட போட்டி!செலிபரேஷனுக்கு அபராதம்
முன்னதாக, பஞ்சாப்புக்கெதிரான போட்டியில் அந்த அணியின் பிரியான்ஸ் ஆர்யாவை விக்கெட் எடுத்த பிறகு அவருக்கு அருகில் சென்று நோட்புக் செலிபிரேஷன் (கைகளில் வெறுமனே பெயர் எழுதுவது போல செய்தல்) செய்தார் திக்வேஷ்.
இந்தச் செயலால், போட்டி நடத்தை விதிகளை மீறியதாக திக்வேஷுக்கு பிசிசிஐ, ஒரு தகுதி நீக்கப் புள்ளியோடு போட்டிக் கட்டணத்தில் 25 சதவிகிதம் அபராதம் விதித்தது.
திக்வேஷ் சிங் ரதிஇருப்பினும், அதற்கடுத்து மும்பைக்கெதிரான போட்டியில் நமன் திர் விக்கெட்டை எடுத்தபோதும் திக்வேஷ் அதே நோட்புக் செலிபிரேஷனில் ஈடுபட்டார். அதனால், பிசிசிஐ அவருக்கு இரண்டு தகுதி நீக்கப் புள்ளியோடு போட்டிக் கட்டணத்தில் 50 சதவிகிதம் அபராதம் விதித்தது.
இத்தகைய சூழலில்தான், நேற்றைய போட்டியில் சுனில் நரைன் விக்கெட் எடுத்தபோது மீண்டும் நோட்புக் செலிபிரேஷன் செயலில் திக்வேஷ் ஈடுபட்டிருக்கிறார். இந்த முறை தரையில் பெயர் எழுதுவது போல செலிபிரேஷன் செய்தார்.
Instant impact! #DigveshRathi comes into the attack and gets the wicket of his idol, #SunilNarine!
Watch the LIVE action ➡ https://t.co/RsBcA7HaAO #IPLonJioStar #KKRvLSG | LIVE NOW on Star Sports 2, Star Sports 2 Hindi & JioHotstar! pic.twitter.com/AkNVKFeQtw
ஏற்கெனவே, இரண்டு முறை இவ்வாறு செய்து அபாரதத்துக்குள்ளானபோதும் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக அதே செயலில் ஈடுபட்டிருப்பதால் மீண்டும் பிசிசிஐ அபாரதத்துக்கு பிசிசிஐ ஆளாவார் என்று பேச்சுக்கள் அடிபடுகிறது.
அதேசமயம், சுனில் நரனைப் போல பவுலிங் ஆக்ஷனைக் கொண்ட திக்வேஷ் தற்போது அவரையே விக்கெட் எடுத்திருக்கிறார் என்றும் சிலர் பாராட்டி வருகின்றனர்.
மெகா ஏலத்தில் ரூ. 30 லட்சத்துக்கு லக்னோ அணியால் வாங்கப்பட்ட திக்வேஷ், 5 போட்டிகளில் 7.47 எக்கனாமியில் மொத்தமாக ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.
முக்கியமாக இந்த 5 போட்டிகளிலும் விக்கெட் வீழ்த்தியிருக்கும் திக்வேஷ், மும்பைக்கெதிரான போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
PBKS vs CSK : சென்னையை வீழ்த்திய அந்த 24 பந்துகள்; ஸ்ரேயஸ் ஐயரின் மாஸ்டர் பிளான்
8 months ago
9







English (US) ·