ARTICLE AD BOX
மான்ஸ்டர்', 'பர்ஹானா' படங்களை இயக்கிய இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், அதர்வா, நிமிஷா சஜயன் நடிப்பில் கடந்த 20 ஆம் தேதி வெளியானத் திரைப்படம் 'DNA'.
இப்படம் மக்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் சென்னையில் நடைபெற்றது.
DNAநிகழ்ச்சியில் பேசிய நிமிஷா சஜயன், “ நான் நடிக்கும் படங்கள் ரிலீஸ் ஆகும்போது ஒரு பயம் இருக்கும். ஆனால் இந்தப் படத்தைப் பொறுத்தவரை எனக்கு அப்படி எதுவும் இல்லை. எல்லோரும் நான் நன்றாக நடித்திருக்கிறேன் என்று சொல்கிறார்கள். அந்த கிரெடிட் இயக்குநரைத்தான் சேரும்.
நான் படப்பிடிப்பை என்ஜாய் செத்தேன். அதர்வா ஒரு திறமையான நடிகர். மிகவும் டெடிகேட் ஆக இருப்பார். அதர்வா இல்லையென்றால் திவ்யா கதாபாத்திரம் முழுமையானதாக இருந்திருக்காது.
நிமிஷா சஜயன்படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. 'DNA'வின் வெற்றிக்கு படக்குழுவினர் ஒவ்வொருவரும் தான் காரணம். மேலும் ஊடகங்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துகொள்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.
DNA: 'இந்தப் படம் எப்படி மக்களிடம் வரவேற்பை பெறும் என்றெல்லாம் யோசிக்கவில்லை, ஆனால்...'- அதர்வாசினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

6 months ago
7





English (US) ·