Dragon 100: ``நான் கோபக்காரன்னு புகார்கள் சொல்லியிருக்காங்க!'' - இயக்குநர் மிஷ்கின்

5 months ago 7
ARTICLE AD BOX

அஸ்வத் மாரிமுத்து - பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகி கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி ஹிட் அடித்த திரைப்படம் 'டிராகன்'. ஹீரோவாகத் தொடர்ந்து ஹிட் வரிசைகளை அடுக்கி வருகிறார் பிரதீப் ரங்கநாதன்.

'டிராகன்' படத்தில் பிரதீப்புடன் கயாடு லோஹர், அனுபாமா பரமேஷ்வரன், மிஷ்கின் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

Dragon Dragon

இப்படத்தின் 100-வது நாள் விழா கடந்த சனிக்கிழமை சென்னையில் நடைபெற்றது. இங்கு படக்குழுவினர் அனைவருக்கும் சிறப்பு நினைவுப் பரிசு ஒன்று வழங்கப்பட்டது.

இயக்குநர் மிஷ்கின் தற்போது பிரான்ஸில் இருப்பதால் அந்த நிகழ்வில் அவரால் கலந்துகொள்ள முடியவில்லை. அதனால் படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்து ஒரு காணொளியை அனுப்பியிருக்கிறார்.

அந்தக் காணொளியில் மிஷ்கின் பேசுகையில், "'டிராகன்' படத்தின் 100-வது நாள் விழாவுக்கு என்னால வர முடியல. நான் இப்போ பிரான்ஸ்ல இருக்கேன். இங்க ஒரு கணவன்-மனைவியைச் சந்திச்சேன்.

அவங்க மஹாராஷ்டிராவிலிருந்து இங்க விமானத்துல வரும்போதுதான் 'டிராகன்' படத்தைப் பார்த்திருக்காங்க. அதிர்ஷ்டவசமாக, படம் பார்த்து முடிச்சதும் நான் அவங்க முன்னாடி இருந்திருக்கேன்.

இப்போ எல்லோருமே என்னை ஒரு கல்லூரிப் பிரின்சிபளாகதான் பார்க்கிறாங்க. அதற்கு நான் அஸ்வத் மாரிமுத்துவுக்கு நன்றி சொல்லிக்கிறேன். இந்தப் படம் மக்கள் மனசுல முக்கியமான இடத்தைப் பிடிச்சிருக்கு. அதற்காக நான் உனக்குக் கடன் பட்டிருக்கேன்.

Director MysskinDirector Mysskin

அஸ்வத் மாரிமுத்து நிறைய நல்ல படங்கள் பண்ணி உச்சத்துக்குப் போகணும். நிறைய நல்ல படங்கள் பண்ணனும். அஸ்வத்தும் நல்ல படங்கள்தான் பண்ணுறான். ஏ.ஜி.எஸ். குடும்பத்துக்கு நான் கடமைப்பட்டிருக்கேன்.

நான் படங்கள்ல பணிபுரியும்போது என்னைப் பற்றி புகார்களெல்லாம் வந்திருக்கு. நான் ரொம்ப கோபக்காரன்னு சொல்லியிருக்காங்க. என்னைக் குழந்தை மாதிரி தொட்டில்ல வச்சு இந்தப் படத்தோட உதவி இயக்குநர்கள் பார்த்துக்கிட்டாங்க. பிரதீப் ரங்கநாதன் ஒரு ஸ்வீட் பாய்.

என்னைப் பத்திரமாகப் பார்த்துக்கிட்டான். இந்தக் காலத்துல 100 நாள்கள் படம் ஓடுறது பெரிய விஷயம். ஆனா, அதை அஸ்வத் பண்ணியிருக்கான்." என்றார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read Entire Article