ENG v IND: "3 அனுபவ வீரர்கள் இல்லை; இது நமக்கு அரிய வாய்ப்பு" - இந்திய வீரர்களுக்கு கம்பீர் உத்வேகம்

6 months ago 7
ARTICLE AD BOX

புதிய கேப்டன் சுப்மன் கில் தலைமையிலான இந்திய இளம் படை ஜூன் 20-ம் தேதி முதல் இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது.

ரோஹித், கோலி, அஸ்வின் ஆகிய சீனியர் வீரர்கள் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டதால், அவர்களின் வெற்றிடம் நிச்சயம் இந்திய அணியில் வெளிப்படக்கூடும்.

குறிப்பாக, கோலியின் இடத்தை யார் நிரப்பப்போகிறார் என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இந்த நிலையில், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், இந்த டெஸ்ட் தொடரை இரண்டு கண்ணோட்டத்தில் பார்க்கலாம் எனக் கூறியிருக்கிறார்.

சுப்மன் கில்சுப்மன் கில்

அணியினருடன் பேசிய கம்பீர், "இதை நாம் இரண்டு வழிகளில் பார்க்கலாம். அதில் ஒன்று: மூன்று அனுபவ வீரர்கள் (கோலி, ரோஹித், அஸ்வின்) இல்லாமல் நாம் இருக்கிறோம்.

மற்றொன்று, நாட்டுக்காக நாம் சிறப்பாகச் செயல்பட இதுவொரு அரிய வாய்ப்பு.

IND vs ENG: "ரோஹித், கோலி இடத்தை நிரப்புவது கடினம்; பேட்டிங் ஆர்டர்..." - கேப்டன் கில்

இந்த அணியைப் பார்க்கும்போது, வேட்கை, ஆர்வம், எதாவது சிறப்பாகச் செய்ய வேண்டும் என்ற அர்ப்பணிப்பு இருப்பதாக நினைக்கிறேன்.

நாம் இழப்பதற்குத் தயாரானால், கம்ஃபர்ட் ஸோனிலிருந்து வெளிவந்தால், போராடத் தொடங்கினால், ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு செஷனிலும், ஒவ்வொரு மணிநேரத்திலும், ஒவ்வொரு பந்திலும் மறக்க முடியாத சுற்றுப்பயணத்தை நிகழ்த்த முடியும்.

அதை இன்றிலிருந்தே தொடங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நாட்டுக்காக விளையாடுவதை விடப் பெரிய பெருமை எதுவும் இல்லை" என்று கூறினார்.

ரோஹித், கோலி, அஸ்வின் ஆகியோர் இல்லாத கில் அண்ட் கோ இந்திய அணி குறித்து உங்களின் கருத்துக்களை கமெண்ட்டில் பதிவிடுங்கள்.

"எல்லா பந்துக்கும் பேட்டை சுழற்றுவதை நிறுத்துங்கள்; உங்களின் பலம்..." - பண்ட்டுக்கு கங்குலி அட்வைஸ்

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read Entire Article