ENG vs IND: `Cap no. 317 - அறிமுகமானார் சாய் சுதர்சன்' - டாஸில் கேப்டன் கில் கூறியதென்ன?

6 months ago 7
ARTICLE AD BOX

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் லீட்ஸ் ஹெடிங்லி மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 3:30 மணிக்கு தொடங்கியது.

டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். அதைத்தொடர்ந்து பேசிய பென் ஸ்டோக்ஸ், ஹெடிங்லி மைதானத்தில் சில நல்ல போட்டிகள் விளையாடியிருப்பதாகவும், இப்போட்டியில் ஆரம்பத்திலேயே பிட்ச் கண்டிஷன்களை பயன்படுத்திக்கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தார்.

பென் ஸ்டோக்ஸ் - சுப்மன் கில்பென் ஸ்டோக்ஸ் - சுப்மன் கில்

அவரைத்தொடர்ந்து பேசிய இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், "முதல் செஷன் சற்று கடினமாக

இருக்கலாம். அதன்பிறகு பேட்டிங் செய்ய பிட்ச் நன்றாக இருக்கலாம்.

வெயில் வந்துவிட்டதால் பேட்டிங் எங்களுக்குச் சாதகமாக இருக்கும். நன்றாகத் தயாராகியிருக்கிறோம்.

பெக்கன்ஹாமில் ஒரு பயிற்சி ஆட்டம் விளையாடியிருக்கிறோம். வீரர்கள் நன்றாக இருக்கிறார்கள்.

சாய் சுதர்சன் அணியில் அறிமுகமாகிறார். மேலும், ஒன்டவுனில் சாய் சுதர்சன் இறங்குவார். கருண் நாயரும் இப்போட்டியில் களமிறங்குகிறார்." என்று தெரிவித்தார்.

IND vs ENG: "இந்த 3 விஷயங்களில் கவனமாக இருங்கள்" - சுப்மன் கில் அணிக்கு சச்சின் ஆலோசனை!

அதையடுத்து, இரு அணிகளின் தேசிய கீதம் ஒளிக்கப்படுவதற்கு முன்பாக அனைவரும், அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தினர்.

மேலும், இருநாட்டு வீரர்களும் தங்களின் கைகளில் கருப்பு பேட்ஜ் அணிந்து களமிறங்கினர்.

ENG vs INDENG vs IND

பிளெயிங் லெவன்:

இந்தியா: ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட், கருண் நாயர், ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், பும்ரா, சிராஜ், பிரசித் கிருஷ்ணா

இங்கிலாந்து: ஜாக் க்ராவ்லி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஷ் டங்கு, சோயிப் பஷீர்

ENG vs IND: இந்திய அணியின் கேப்டனாக முதல் டெஸ்ட் - போட்டிக்குமுன் கேப்டன் கில் பேசியவை!
Read Entire Article