ENG vs IND: "அச்சமின்றி இங்கிலாந்தை நெருக்கிய இந்தியா" - கேப்டன் கில்லை வாழ்த்திய விராட் கோலி

5 months ago 7
ARTICLE AD BOX

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் அபார வெற்றி பெற்ற இளம் இந்திய அணியை மனதார வாழ்த்தியுள்ளார் விராட் கோலி. எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் 58 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்தை வென்று சாதனை படைத்துள்ளது சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி.

336 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதன் மூலம், வெளிநாடுகளில் பெற்ற மிகப் பெரிய வெற்றிக்குச் சொந்தக்காரராகத் தலை நிமிர்கிறார் கேப்டன் கில். அவரது தலைமைத்துவத்தைச் சிறப்பாக வாழ்த்தியுள்ளார் முன்னாள் கேப்டன் கோலி.

Gill : 'நான் அடிச்சு சீரிஸையே ஜெயிக்கணும்!' - வெற்றிக்குப் பின் கில் உறுதி!

விராட் கோலி பதிவு:

"எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் மிகப்பெரிய வெற்றி. அச்சமின்றி இங்கிலாந்தை நெருக்கித் தள்ளிக்கொண்டே இருந்தனர். பேட்டிங்கிலும், ஃபீல்டிங்கிலும் சும்பன் கில் புத்திசாலித்தனமாக அணியை வழிநடத்தினார்.

ஒவ்வொருவருமே தாக்கத்தை ஏற்படுத்தும் பங்களிப்பை வழங்கினர். இந்த பிட்சில் சிறப்பாகப் பந்துவீசியதற்காக ஆகாஷ் மற்றும் சிராஜுக்குச் சிறப்புப் பாராட்டுகள்" எனப் பதிவிட்டுள்ளார் விராட்.

Great victory for India at Edgbaston. Fearless and kept pushing England to the wall. Brilliantly led by Shubhman with the bat and in the field and impactful performances from everyone. Special mention to Siraj and Akash for the way they bowled on this pitch. @ShubmanGill

— Virat Kohli (@imVkohli) July 6, 2025

இரண்டாவது போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் லார்ட்ஸில் நடக்கப்போகும் அடுத்த போட்டியில் புதிய உத்வேகத்துடன் இந்திய அணி களமிறங்கும்.

கலக்கிய கில், வேகப்பந்து சூறாவளி

முதல் இன்னிங்ஸில் 269 ரன்கள் மற்றும் இரண்டாவதில் 161என சுப்மன் கில் சேர்த்த 430 ரன்கள் அணியின் வெற்றிக்கும் மிகப் பெரிய அளவில் உதவின. இது கிரஹாம் கூச் (456)-க்குப் பிறகு ஒரே போட்டியில் ஒரு பேட்ஸ்மேன் அடிக்கும் இரண்டாவது பெரிய ரன் ஆகும்.

வேகப் பந்துவீச்சாளர் அகாஷ் தீப் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள், இரண்டாவதில் 4 விக்கெட்டுகள் எனச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முகமது சிராஜ் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள், இரண்டாவதில் 1 விக்கெட் எடுத்து அசத்தினார்.

IND vs ENG: "இந்த 3 விஷயங்களில் கவனமாக இருங்கள்" - சுப்மன் கில் அணிக்கு சச்சின் ஆலோசனை!

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read Entire Article